ED Raid: டெல்லி கார் குண்டு வெடிப்பு.. உமர் பணியாற்றிய பல்கலைக்கழகம் உள்பட 25 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
டெல்லி: டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. உமர் பணியாற்றிய அல் பலாஹ் பல்கலைக்கழகத்தின் நிதி பரிவர்த்தனை குறித்து பல்கலைக்கழக அறங்காவலர்கள், நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதியில் நடந்துள்ளது என்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.

டெல்லி கார் குண்டு வெடிப்பு
நாட்டையே உலுக்கிய இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை முதலில் 15 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு லுக்மான் (வயது 50) என்பவரும், நேற்று வினய் பதக் (50) என்பவரும் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இவர்கள் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரை வழங்கியதாக அமீர் ரஷீத் அலி என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் வெடித்துச் சிதறிய கார், இவரது பெயரில்தான் இருந்தது. இவர் காரை வழங்கியதோடு மட்டுமல்லாமல், பயங்கரவாதிகளோடு சதித்திட்டம் தொடங்கியபோதே தொடர்பில் இருந்துள்ளார். ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இவர் கார் வாங்குவதற்காக டெல்லிக்கு வந்து சென்றிருக்கிறார்.
தவறான தகவல் கொடுத்ததாக
மேலும் தற்கொலை பயங்கரவாதி டாக்டர் அமர் தங்குவதற்கு இடமும் வழங்கியதாக தெரிகிறது. குண்டு வெடிப்பில் ஹரியானா மாநிலத்தின் அல்பலா பல்கலைக்கழக டாக்டர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த டாக்டர்களில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளி உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். இதன் மீதான விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே அல்பலா பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கத்தில் அங்கீகாரம் தொடர்பாக தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்ததாக கூறி பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் நாக் கமிட்டி ஆகியவை விளக்கம் கேட்டன. ஏற்கனவே பயங்கரவாத சம்பவ விசாரணையில் பல்கலைக்கழகமும் உட்படுத்தப்பட்டது.
அல்பலா பல்கலைக்கழகத்துக்கு சம்மன்
இந்த நிலையில் அங்கீகாரம் தொடர்பான முரண்பாடுகளிலும் சிக்கியதைத் தொடர்ந்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அந்த பல்கலைக்கழகம் மீது 2 தனித்தனி வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் அடிப்படையில் அல்பலா பல்கலைக்கழகத்துக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. 2 வழக்குகளின் பேரிலும் தனித்தனி சம்மன்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
25 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜாவேத் அகமது சித்திக் இது தொடர்பாக போலீசில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பல்ககழைக்கம் மற்றும் அதன் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்கள் என 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
பரிதாபாத்தில் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தின் ஒக்லா அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனைமேற்கொண்டது. பல்கலைக்கழகத்தின் நிதி குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்ட நிலையில், அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. அதேபோல, பொருளாதார குற்றப்பிரிவும் ஒருபக்கம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications