டெல்லியில் 26/11 பாணி தாக்குதல்.. திட்டம் இதுதான்! கார் வெடிப்பு விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்
டெல்லி: மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் டெல்லி செங்கோட்டை பகுதியில் திங்கட்கிழமை நடந்த கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான விசாரணையில், டெல்லியில் 25/11 பாணியில் தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்று என்டிடிவி தெரிவித்திருக்கிறது.
டெல்லியின் முக்கிய அடையாளங்களான செங்கோட்டை, இந்தியா கேட், கான்ஸ்டிடியூஷன் கிளப் மற்றும் கௌரி சங்கர் கோவில் ஆகியவற்றைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாக திங்கட்கிழமை மாலை நடந்த குண்டுவெடிப்பு குறித்த விசாரணையில் தெரியவந்திருப்பதாக என்டிடிவி செய்தி ஊடகம் கூறியிருக்கிறது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி அன்று நடந்த தாக்குதல்களில், தாஜ் மஹால் ஹோட்டல், ஓபராய் டிரிடென்ட் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், மற்றும் லியோபோல்ட் மருத்துவமனை உட்பட 12 இடங்களில் ஒரே நேரத்தில் துப்பாக்கிச் சூடும், குண்டுவெடிப்புகளும் நடந்தன. இதைத்தான் 26/11 தாக்குதல் என்று குறிப்பிடப்படுகிறது.
அதேபோன்ற ஒரு தாக்குதல் சம்பவத்தை பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். டெல்லியில் நடந்த இந்தச் சதித் திட்டம் ஜனவரி மாதத்திலிருந்தே திட்டமிடப்பட்டு வந்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய இந்தத் தீவிரவாதக் குழு பல மாதங்களாக இந்தத் தாக்குதலுக்குத் தயாராகி வந்தது என்று விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இந்த பயங்கரவாதிகள் டெல்லி மட்டுமல்லாமல், குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் போன்ற முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்த 200 சக்திவாய்ந்த மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்து வந்திருக்கின்றனர். மதத் தலங்களைத் தாக்கி சமூக பதற்றத்தை தூண்டுவதே பயங்கரவாதிகள் சதி செயலின் நோக்கம். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா, சோபியான் மற்றும் அனந்தநாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில மருத்துவர்கள் இந்த வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் ஃபரிதாபாத்தில் தங்கள் தளத்தை அமைத்துள்ளனர்.
மருத்துவர்களாக இருந்ததால், இவர்கள் டெல்லி என்சிஆர் முழுவதும் சந்தேகம் எழாமல் எளிதாக நடமாட முடிந்தது. பிறகு, தௌஜ் மற்றும் ஃபதேபூர் தாகா பகுதிகளில் வெடி பொருட்களை சேமிக்க அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். கார் வெடிப்பு தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஷாஹீன் சயீத், முஸம்மில் ஷகீல் கணாலே மற்றும் ஆதீல் ரதர் என 3 பேர் மருத்துவர்கள். டாக்டர் உமர் நபி என்பவர் நவம்பர் 10 அன்று நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த தற்கொலை படையை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.
டாக்டர் சயீத்துடன் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த மேலும் மூன்று மருத்துவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் மேல் வலுவான குற்றச்சாட்டுகள் இல்லை என என்டிடிவி வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications