மனைவி சித்திரவதை.. ரூ.10 லட்சம் கேட்டு டார்ச்சர்! டெல்லியில் பிரபல கஃபே உரிமையாளர் தற்கொலை
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த பிரபல கஃபே உரிமையாளர் புனித் குரானா என்பவர்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார். புனித் குரானாவும் அவரது மனைவியும் பரஸ்பர விவாகரத்து கோரி விண்ணப்பித்த நிலையில், திடீரென தனது மனைவி கூடுதல் தொகை கேட்டும் மன ரீதியாகவும் சித்திரவதைச் செய்வதாகச் சொல்லி புனித் குரானா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த மாதம் பெங்களூரில் வசித்து வந்த ஐடி ஊழியர் சுபாஷ் அதுல் தற்கொலை செய்து கொண்டிருந்தார். மனைவி தன்னை செய்வதாகச் சொல்லி அவர் இந்த மோசமான முடிவை எடுத்திருந்தார். இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

தற்கொலை:
இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே மீண்டும் அதேபோல ஒரு அதிர்ச்சி சம்பவம் இப்போது டெல்லியில் நடந்துள்ளது. மனைவியும் மாமனார்- மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாகச் சொல்லி டெல்லியைச் சேர்ந்த கஃபே ஓனர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
40 வயதான டெல்லியைச் சேர்ந்த கஃபே உரிமையாளரான புனித் குரானா என்பவர்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது மனைவி மனிகா பஹ்வா மற்றும் மாமனார்- மாமியார் சித்திரவதை செய்வதாகவும் சொல்லி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. டெல்லியின் மாடல் டவுன் பகுதியைச் சேர்ந்த குரானா தற்கொலைக்கு முன்பு சில வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.
கருத்து வேறுபாடு:
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் முதலில் விவாகரத்துக்கு அப்ளை செய்துள்ளனர். இருப்பினும், அது சீக்கிரமாகத் தகராறாக மாறியதாகக் குரானா குறிப்பிட்டுள்ளார்.. நிதி ரீதியாகத் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் ரூ. 10 லட்சம் கூடுதலாகக் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் வேறு வழி இல்லாமலேயே இந்த முடிவை எடுப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
மேலும் அவர், "எனது மாமியார் மற்றும் என் மனைவி சேர்ந்து கொண்டு என்ன சித்திரவதை செய்கிறார்கள். இதனால் வேறு வழியில்லாமல் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். கருத்து வேறுபாடு காரணமாக முதலில் பரஸ்பர விவாகரத்து கோரி விண்ணப்பித்தோம். இதற்காக நீதிமன்றத்தில் சில நிபந்தனைகளில் கையெழுத்திட்டுள்ளோம். 180 நாட்களுக்குள் அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.
ரூ.10 லட்சம்:
ஆனால் திடீரென எனது வரம்பைத் தாண்டி சில புதிய நிபந்தனைகளை என் மாமியார் மற்றும் என் மனைவி கூறுகிறார்கள். திடீரென கூடுதலாக ரூ. 10 லட்சம் கேட்கிறார்கள். அவ்வளவு தொகை என்னிடம் இல்லை.. எனது பெற்றோர் ஏற்கனவே பெருந்தொகை கொடுத்துவிட்டார்கள். அவர்களிடம் இதைக் கேட்க முடியாது" என்று அதில் கூறுகிறார்.
தற்கொலை செய்து கொண்ட புனித் குரானாவின் சகோதரி இது தொடர்பாகக் கூறுகையில், "சகோதரி மற்றும் பெற்றோர்களுடன் சேர்ந்து கொண்டு எனது சகோதரனை மனைவி மனரீதியாகச் சித்திரவதை செய்து துன்புறுத்தியுள்ளனர். தனக்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை எனது சகோதரன் வீடியோவாக ரெக்கார்ட் செய்துள்ளார். அது சுமார் 59 நிமிடங்கள் இருக்கிறது. பணம் கேட்டுக் கொடுமைப்படுத்தியது மட்டுமின்றி, சமூக வலைத்தள பக்கங்களையும் ஹேக் செய்து துன்புறுத்தியுள்ளனர்" என்றார்.
திக்திக் சம்பவம்
இதற்கிடையே டிசம்பர் 30ம் தேதி குரானாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் குரானாவை அவரது மனைவி மிக மோசமாகத் திட்டுவது பதிவாகியிருக்கிறது. இது தொடர்பான ஆடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இந்த வாக்குவாதம் நடந்த மறுநாளே அதாவது டிச. 31ம் தேதி அவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications