என் உடல்நிலை மோசமாகிவிட்டது.. ஆனாலும் ஜூன் 2ல் திகார் சிறையில் சரணடைவேன்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிறையிலிருந்து இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ள, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் ஜூன் 2ம் தேதி சரணடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் 2021-2022ம் ஆண்டு மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.

இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
இதனையடுத்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்றும், அமலாக்கத்துறை சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மாவின் ஒரு நபர் அமர்வுக்கு முன்னர் விசாரிக்கப்பட்டு வந்தது.
விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் கெஜ்ரிவாலுக்கு சாதகமாக அமையவில்லை. மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே அவர் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீனோ, வேறு எந்த நிவாரணத்தையோ கோரவில்லை. மாறாக, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சட்ட விரோதம் என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
விசாரணையில் "கெஜ்ரிவால் மீதான விசாரணை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை நீண்ட காலம் நடைபெறும் நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க இருக்கிறோம். நாங்கள் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. வெறுமென பரிசீலிக்க இருக்கிறோம்" என்று கூறிய நீதிபதிகள், அடுத்தடுத்த விசாரணையின்போது கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
கடந்த மே மாதம் 10ம் தேதி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜூன் 1ம் தேதி வரை ஜாமீனில் கெஜ்ரிவால் வெளியில் இருக்கலாம். ஜூன் 2ம் தேதி அவர் சரணடைய வேண்டும்.
ஆனால், தனது உடல்நலத்தை காரணம் காட்டி, மேலும் 7 நாட்களுக்கு இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். சில மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டும் என்று இந்த கோரிக்கை மனுவில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜூன் 2ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைவேன் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
"தேர்தல் பிரச்சாரம் செய்ய உச்ச நீதிமன்றம் எனக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது. நாளை மறுநாள் நான் மீண்டும் திகார் சிறைக்கு செல்வேன். இந்த நேரத்தில் இவர்கள் என்னை எவ்வளவு காலம் சிறையில் அடைத்து வைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் நான் உற்சாகமாக இருக்கிறேன். நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து காப்பாற்ற சிறைக்கு செல்கிறேன் என்று பெருமைப்படுகிறேன். என் மருந்துகளை நிறுத்திவிட்டார்கள். இவர்கள் ஏன் இதை செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும், "நான் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரமான நீரிழிவு நோயால் தவித்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக தினமும் 4 ஊசிகளை எடுத்து வருகிறேன். ஆனால் நான் சிறைக்கு சென்ற பின்னர் என்னுடைய மருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. எனவே என்னுடைய சர்க்கரையின் அளவு 300ஐ தொட்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் சிறுநீரகம் மற்றும் வயிறு முழுவதுமாக பாதிக்கப்படும்.
அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியவில்லை. சிறையில் 6 கி.கி வரை எடையை இழந்திருக்கிறேன். இந்த அறிகுறிகள் எல்லாம் தீவிர நோயின் அறிகுறிகள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் பாதிப்புகளை கண்டறிய மேலும் சில பரிசோதனைகளை செய்ய வேண்டி உள்ளது" என்று கூறியுள்ளார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications