சிறையில் இருந்தால் என்ன! சின்ன பிரச்னையை கூட கவனித்து கெஜ்ரிவால் போட்ட 2வது உத்தரவு! அரண்ட அதிகாரிகள்
டெல்லி: மதுபான கொள்கை விவகாரத்தில் சிறையில் உள்ள கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாத நிலையில், அவர் அங்கிருந்தபடியே தனது இரண்டாவது உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் சிறையில் இருந்தாலும் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் தொடர்வார் என்றும் தேவைப்பட்டால் சிறையில் இருந்தபடியே அவர் டெல்லி அரசை நடத்துவார் என்றும் ஆம் ஆத்மி வட்டாரங்கள் அறிவித்தன.
உத்தரவு: இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே தனது உத்தரவைப் பிறப்பித்த நிலையில், இப்போது இரண்டு நாட்கள் கழித்து ஜெயலிலில் இருந்தபடியே அவர் இரண்டாவது உத்தரவைப் பிறப்பித்துள்ளார். டெல்லியில் அம்மாநில அரசு மொஹல்லா கிளினிக்குகளை நடத்தி வரும் நிலையில், அங்கே இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
கெஜ்ரிவால் உத்தரவை டெல்லி சுகாதார அமைச்சர் சௌரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். கெஜ்ரிவால் சிறையில் இருந்தாலும் டெல்லியில் வசிக்கும் எந்தவொரு மக்களும் அசவுகரியத்தைச் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக சௌரப் பரத்வாஜ் தெரிவித்தார்.
உத்தரவில் உள்ளது என்ன: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர் உள்ளே இருந்தாலும் சரி வெளியே இருந்தாலும் சரி, சாதாரண நபர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் அங்கே அனைத்து சேவைகளும் அவருக்குக் கிடைக்க வேண்டும். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் எங்கு வேண்டுமானாலும் சென்று மருந்துகளை வாங்க முடியும். ஆனால், ஏழைக்கு அரசு மருத்துவமனை மட்டுமே இருக்கிறது.
டெல்லியில் பல லட்சம் ஆதரவற்ற குடும்பங்கள் அரசைத் தான் முழுமையாக நம்பி இருக்கிறார்கள். சில குறிப்பிட்ட நோய்களுக்கு வாழ்நாள் முழுக்க மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். அந்த மருந்துகளும் மொஹல்லா கிளினிக்குகளில் தான் கிடைக்கிறது. மேலும், வழக்கமான ரத்த பரிசோதனைகளுக்காகப் பலர் டெல்லி அரசின் மொஹல்லா கிளினிக்குகளை நம்பி இருக்கிறார்கள்.
சின்ன பிரச்சினை கூட: இருப்பினும், இந்த இலவச டெஸ்டிங்கில் சில பிரச்சினைகள் இருப்பதாகச் சிலர் புகார் அளிப்பதாக முதலமைச்சருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சிறையில் இருந்தாலும் மக்கள் சிக்கலை சந்திக்கக் கூடாது என்பதற்காக சின்ன பிரச்சினையை கூட கவனித்து கெஜ்ரிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அனைத்து மருத்துவமனைகளிலும், மொஹல்லா கிளினிக்குகளிலும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை இலவசமாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடவுள் போல: எங்களுக்கு அவரது உத்தரவு என்பது கடவுளின் உத்தரவு போல.. உடனடியாக நாங்கள் போர்க்கால அடிப்படையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்போம். கெஜ்ரிவால் சிறையில் இருக்கிறார், ஆனால் அவர் ஒவ்வொரு நொடியும் டெல்லி வாசிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். தான் இல்லாத நேரத்திலும் எந்த சேவையும் பாதிக்கப்படக்கூடாது என்பது மட்டுமே அவரது கவலை.. நாங்கள் 24 மணி நேரமும் வேலை செய்து டெல்லி மக்களுக்கு எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வோம்" என்றார்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெல்லி அமைச்சர் அதிஷி சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலின் முதல் ஆர்டரை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கோடைக் காலம் நெருங்கும் நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு போதுமான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்யவும், சாக்கடை பிரச்சினைகளை உடனடியாக சரி செய்யவும் கெஜ்ரிவால் உத்தரவிட்டதாக அதிஷி தெரிவித்தார். இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளும் அதிஷி கண்ணீர்விட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications