நாங்க ரெடி! முதல் ஆளாக ஸ்டாலினுடன் கைகோர்த்த கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு எதிரான ‘அதிரடி’ மூவுக்கு ஆதரவு!
டெல்லி : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை முதல் ஆளாக ஏற்று கடிதம் எழுதியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆளுநருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதாக ஸ்டானிடம் உறுதி அளித்துள்ளார் கெஜ்ரிவால்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு மத்திய அரசு, குடியரசுத் தலைவர் தகுந்த அறிவுரை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். இது தொடர்பாக பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அந்தந்த மாநில சட்டமன்றங்களில், மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இதன் மூலம் மாநில அரசுகளின் இறையாண்மையை நிலைநிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார் ஸ்டாலின்.

மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில ஆளுநர்கள் காலவரையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் முடங்கிப் போயிருப்பதையும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால். அதில், டெல்லி சட்டசபையிலும் இதுபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், பாஜக அல்லாத மாநில அரசுகளின் அதிகாரங்களை அபகரிக்கும் மத்திய அரசு மற்றும் அதன் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம். நாங்கள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறோம்.
மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை டெல்லி சட்டசபையில் வரவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications