டெல்லி புதிய முதல்வராக அதிஷி செப்.21-ல் பதவியேற்கிறார்! 6 மாதங்கள் மட்டும் பதவியில் நீடிப்பார்!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றால் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தற்போது உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆனாலும் முதல்வர் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளை விதித்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஆளுநரை சந்தித்து புதிய முதல்வராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் அதிஷி வழங்கினார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வர், அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக ஜனாதிபதிதான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக டெல்லி துணை ஆளுநர், ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை அனுப்புவார்.
இதன்படி டெல்லியில் வரும் 21-ந் தேதி புதிய முதல்வராக அதிஷி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்க ஜனாதிபதிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். இதன்படி ஜனாதிபதி உத்தரவிட்ட பின்னர் அதிஷியும் அவரது அமைச்சரவையும் பதவியேற்கும்; சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும். ஆகையால் அடுத்த 6 மாத காலத்துக்கு மட்டுமே அதிஷி முதல்வராக பதவி வகிப்பார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications