தாக்குதல் எதிரொலி.. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!
டெல்லி: டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வீட்டில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் மனுக்களை கொடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
நேற்று ரேகா குப்தா வீட்டில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரேகா குப்தாவின் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் கடுமையாக தாக்கியிருந்தார்.

இதை பார்த்து அதிர்ந்த காவலர்கள் உடனடியாக அந்த நபரிடமிருந்து ரேகா குப்தாவை மீட்டனர். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேகா குப்தா சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 41 வயதான ராஜேஷ் கிம்ஜி என்றும், இவர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இவர் நாய் ஆர்வலர் என சொல்லப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டபோது, தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு முதலமைச்சர் ரேகா குப்தா வரவேற்பு தெரிவித்திருந்தார். எனவே உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்திருந்ததால் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில் ரேகா குப்தாவின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. உத்தரவை அடுத்து இன்று காலை முதல் ரேகா குப்தா வீட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications