டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கடவுள் அனுமானுக்கு நன்றி".. "பாரத் மாதா கி ஜெய்".. கெஜ்ரிவால் வெற்றி உரையில் உருக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி மக்களின் வெற்றியாக ஆம் ஆத்மி கட்சியின் மகத்தான வெற்றியைப் பாராட்டிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடவுள் ஹனுமானுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் பகவான் அனுமான் டெல்லி மக்களை ஆசீர்வதித்துள்ளதாக தெரிவித்தார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உற்சாகமாக இன்று மாலை பேசினார். அப்போது சிரித்துக்கொண்டே "பாரத் மாதா கி ஜெய்" "இன்க்விலாப் ஜிந்தாபாத்" மற்றும் "வந்தே மாதரம்" உடன் தனது பேச்சை தொடங்கினார்.

Delhi CM Kejriwal thanks Lord Hanuman, chants Bharat Mata Ki Jai

கடவுள் அனுமருக்கு நன்றி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், அனுமர் டெல்லி மக்களை ஆசீர்வதித்துள்ளார் என்றார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், "இது டெல்லி மக்களுக்கு கடவுள் அனுமான் அளித்த ஆசிர்வாதம். அனுமான் ஜி எங்களுக்கு சரியான பாதையை காட்டிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம், இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்கிறோம்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் ஒரு அனுமான் பக்தன் என்று கூறினார். அத்துடன்அந்த நிகழ்ச்சியில் அனுமான் மந்திரத்தையும் ஓதினார்.

அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் அதிமுக அரசிற்கு உச்சநீதிமன்றம் "குட்டு" வைத்துள்ளது... பேரறிவாளனை விவகாரத்தில் முக ஸ்டாலின்!

அனுமான் மந்திரத்தை அவர் ஓதும் வீடியோ வைரலாகிய பின்னர், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஒவைசி ஆகியோரைத் தாக்கி, "இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் 'ஹனுமான் சாலிசா' ஓதத் தொடங்கினார். வரும் நாட்களில், ஒவைசி ஓதுவதை நீங்கள் காண்பீர்கள். அதே. இது நிச்சயமாக நடக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

English summary
Delhi CM Kejriwal thanks Lord Hanuman, chants Bharat Mata Ki Jai in his victory speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X