டெல்லி: காபி ரூ.12, குதிரை வாடகை ரூ.3075.. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த 'ரேட்' லிஸ்ட்!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் தேர்தல் ஆணையமோ வேட்பாளர்களின் செலவுகளை தீவிரமாக கண்காணித்தும் வருகிறது. டெல்லி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எதற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற பட்டியலை ஏற்கனவே வழங்கி இருக்கிறது. அதில் ஒரு கப் காபி ரூ12; ஒரு கப் டீ ரூ. 6 என ஒவ்வொன்றுக்கும் விலை நிர்ணயம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. டெல்லி தேர்தல் களத்தில் ஆளும் ஆத்மி, பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸும் எப்படியாவது சிங்கிள் டிஜிட் இடங்களைப் பெற்றுவிட துடிக்கிறது. டெல்லி தேர்தல் களத்தில் மொத்தம் 699 வேட்பாளர்கள் உள்ளனர்;

டெல்லியில் 71 லட்சம் பெண் வாக்காளர்களை குறிவைத்து ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளன. பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை, கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி என இந்த வாக்குறுதிப்பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே காரசார விவாதங்களும் களைகட்டிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் டெல்லி தேர்தல் களத்தில் வேட்பாளர்களின் செலவுகளையும் தேர்தல் ஆணையம் மிக தீவிரமாக கண்காணித்து வருகிறதாம். ஒவ்வொரு
வேட்பாளரும் எதற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்கிற விவரப் பட்டியலை ஏற்கனவே தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கிறது.
தேர்தல் ஆணையம் தந்த செலவு விவரப் பட்டியல்:
- 1 கப் காபி ரூ.12
- 1 கப் டீ ரூ.6
- 1 பிளேட் பூரி சப்ஜி ரூ.35
- 1 சமோசா, பிரெட் பகோடா ரூ.12
- குதிரைக்கான ஒருநாள் வாடகை ரூ. 3,075
- யானைக்கான ஒருநாள் வாடகை ரூ. 6,150
- தொழிலாளர்களுக்கான ஊதியம் ரூ 692
- பட்டதாரிகளுக்கான ஊதியம் ரூ.913
- டிரோன்கள் ஒரு நாள் வாடகை ரூ7,000
- சிறிய மாலைகள் அதிகபட்சம் ரூ20
- 10 அடி மாலைகள் அதிகபட்சம் ரூ1,500
- மலர் அலங்காரம் ஒரு சதுர அடிக்கு ரூ.35
- டாடா சுமோ, டொயோட்டா வாகனங்கள் வாடகை ரூ2,421
- சாதாரண கார்களுக்கு ஒருநாள் வாடகை ரூ1,499 per day.
- இரு சக்கர வாகனங்களுக்கான வாடகை ரூ.84
- ஒரு நபருக்கான மதிய உணவு ரூ.70.
ஒரு சாண்ட்விச் ரூ20,
1 லிட்டர் வாட்டர் பாட்டில் ரூ.19
ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பம் ஒன்றின் விலை ரூ.25
தேர்தல் செலவு எவ்வளவு?
பொதுவாக சட்டசபை தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ40 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறது; லோக்சபா தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ95 லட்சம் வரை செலவு செய்யலாம். 2019-ம் ஆண்டு வரை லோக்சபா தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ75 லட்சம் வரை செலவு செய்யலாம்; சட்டசபை தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ28 லட்சம் வரை செலவு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டிருந்தது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications