டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டரை பளார் என அறைய பாய்ந்த காங். பெண் வேட்பாளர் அல்கா லம்பா

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லியில் ஆம் ஆத்மி தொண்டரை பளார் என அறைய பாய்ந்த காங். பெண் வேட்பாளர் அல்கா லம்பா - வீடியோ

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவின் போது ஆம் ஆத்மி தொண்டர் ஒருவரை காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா அறைய பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    டெல்லி சாந்தினிசவுக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுபவர் அல்கா லம்பா. அவரை எதிர்த்து பாஜகவின் சுமன் குப்தா, ஆம் ஆத்மியின் பிரகலாத் சிங் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    Delhi Cong candidate Alka Lamba tries to slap AAP worker

    இன்று வாக்குப் பதிவின் போது வாக்குச் சாவடி ஒன்றின் வெளியே செய்தியாளர்களை அல்கா லம்பா சந்தித்து பேசினார். அப்போது ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் அல்கா லம்பாவின் பேட்டிக்கு இடையூறு செய்யும் வகையில் பேசிக் கொண்டே இருந்தார்.

    இதனை பொருட்படுத்தாமல் அல்கா லம்பா பேட்டியளித்தார். ஆனாலும் ஆம் ஆத்மி தொண்டர் அடங்காமல் பேசிக் கொண்டே இருந்தார். இதனால் கடுப்பாகிப் போன அல்கா லம்பா ஒரு கட்டத்தில் அந்த ஆம் ஆத்மி தொண்டரின் கன்னத்தில் அறைய பாய்ந்தார். ஆனால் அத்தொண்டர் விலகிக் கொண்டதால் அறைவிழவில்லை.

    அங்கிருந்த போலீசார் ஆம் ஆத்மி தொண்டரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போதும் ஆவேசம் அடங்காதவராக அல்கா லம்பா அந்த தொண்டரை தாக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+