Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆதாரம் இருக்கு.." பிரிஜ் பூஷனுக்கு பெரிய சிக்கல்.. பாலியல் புகாரில் டெல்லி கோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் வரும் ஜூலை 18இல் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் மீது பல்வேறு மல்யுத்த வீரர்கள் பாலியல் புகாரை எழுப்பியிருந்தனர். கடந்த ஜன. மாதமே இந்த குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தனர்.

 Delhi court Summoned Wrestling Body Chief Brij Bhushan on Sexual Harassment Allegations

அப்போது விசாரணை கமிட்டி ஒன்று அமைக்கப்பட்ட போதிலும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.

மல்யுத்த வீரர்கள்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பின்னரே பிரிஜ் பூஷன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்காமல் டெல்லி போலீஸ் காலம் தாழ்த்துவதாகப் பலரும் சாடினர். மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை டெல்லி போலீசார் மிக மோசமாக நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்தச் சூழலில் தான் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்கள் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.

அதன் பின்னர் சில நாட்களில் தங்கள் போராட்டத்தை நீதிமன்றத்தில் தொடர உள்ளதாகவும் இனி சாலைகளில் இறங்கிப் போராடப் போவது இல்லை என்றும் அறிவித்தனர். இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் ஜூலை 18 ஆம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஆதாரங்கள் இருக்கு: அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 18ஆம் தேதி அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 முறை எம்.பி.யான பிரிஜ் பூஷனுக்கு எதிராக, பாலியல் துன்புறுத்தல், கிரிமினல் மிரட்டல் எனப் பல பிரிவுகளின் கீழ் கடந்த ஜூன் 15ம் தேதி டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மொத்தம் 7 பெண்கள் அவர் மீது புகார் அளித்திருந்தனர். இது தவிர மைனர் மல்யுத்த வீராங்கனை ஒருவரும் பிரிஜ் பூஷனுக்கு எதிராகப் புகார் அளித்திருந்தார். இருப்பினும், பிரிஜ் பூஷன் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும், தன்னை தலைவர் பதவியில் இருந்து காலி செய்யவே இதுபோல பொய் புகார்களைக் கொடுத்துள்ளதாகவும் தொடர்ந்து கூறி வருகிறார்.

போராட்டம்: பிரிஜ் பூஷனுக்கு எதிராகக் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். சர்வதேச தொடர்களில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் எனப் பலரும் போரட்டாத்தில் இறங்கினர். அப்போது டெல்லி போலீசார் அவர்களை இழுத்து, வேனில் போட்டு கைது செய்த படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். ஒரு கட்டத்தில் அவர்கள் தாங்கள் வென்ற பதக்கங்களைக் கூட கங்கை ஆற்றில் விட முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் கங்கை ஆற்றின் கரைக்குச் சென்ற போதிலும் கடைசி நேரத்தில் விவசாய சங்கத்தினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியது நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+