Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரொம்ப “சீரியஸ்”.. சுயநினைவை இழந்த மணீஷ் சிசோடியா மனைவி! காரணம் சொல்லியும் ஜாமீன் தராத நீதிமன்றம்

“சிசோடியாவின் மனைவி சீமாவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சுய நினைவை இழந்து இருப்பதாகவும் வழக்கறிஞர் வாதிட்டார்.”

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அண்மையில் டெல்லி துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய மணீஷ் சிசோடியாவின் மனைவி உடல்நிலை மிகவும் மோசமடைந்து சுயநினைவை இழந்த நிலையில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் ஏற்க மறுத்து காவலை நீட்டித்து உள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்தக் கொள்கையில் இடம் பெற்றிருந்த வரிக்குறைப்பு உள்ளிட்ட முக்கிய சலுகைகள் குறித்த விவரங்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தன.

இதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இதனை தொடர்ந்து டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 31 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக சிசோடியா உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது.

சிபிஐ சோதனை

சிபிஐ சோதனை

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தேதி மணீஷ் சிசோடியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் டெல்லி தலைமை செயலகத்தில் இருக்கும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த விவகாரம் காரணமாக டெல்லி ஆளுநருக்கும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது.

ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

மத்திய அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இதை எடுத்து சிபிஐயை பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இதற்கிடையே டெல்லி மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்ற நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மேயர் பதவியையும் பாஜகவிடம் இருந்து பல ஆண்டுக்கு பிறகு அக்கட்சி கைப்பற்றியது.

 சிபிஐ சம்மன்

சிபிஐ சம்மன்

இதனால் பாஜக - ஆத் ஆத்மி கட்சியினர் இடையே கைகலப்புகளும் ஏற்பட்டு டெல்லி அரசியல் களமே சூடுபிடித்த நிலையில் தான், கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதில் ஆஜராக மணீஷ் சிசோடியா அவகாசம் கோரினார். அது ஏற்கப்பட்டு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அவர் மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார்.

கைதான சிசோடியா

கைதான சிசோடியா

சிபிஐ அதிகாரிகள் அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திகைது செய்தனர். 27 ஆம் தேதி அவரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தை நாடினார். உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ராஜினாமா

ராஜினாமா

இந்த நிலையில் அவர் தனது துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். எந்த காரணமும் இன்றி தன்னை கஸ்டடியில் வைத்து இருப்பதாகவும், சிபிஐ எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராவதாகவும் மணீஷ் சிசோடியா தரப்பில் ஜாமீன் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனைவி உடல்நிலை

மனைவி உடல்நிலை

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிசோடியாவின் மனைவி சீமாவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சுய நினைவை இழந்து இருப்பதாகவும் வாதிட்டார். அந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிமன்றம் சிபிஐ காவலை மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்தது, மார்ச் 10 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைப்பதாக அறிவித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+