Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிலாக்ஸ் பண்ண நினைச்சது ஒரு குத்தமா? காபி ஆர்டர் போட்ட கஸ்டமருக்கு ஜொமாட்டோ தந்த பயங்கர அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காபி குடிக்கலாம் என நினைத்து ஜொமாட்டோவில் ஆர்டர் போட்ட வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உட்கார்ந்த இடத்திலிருந்து உணவை ஆர்டர் செய்து சாப்பிட வசதியாக ஸ்விக்கி, ஜொமாட்டோ ஆகிய இரு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுடன் உணவு டெலிவரியில் தாமதம், பார்சலை மாற்றி கொடுத்தது உள்ளிட்ட சண்டை சச்சரவுகள் இருந்தன.

ஒரு நிறுவனத்தின் ஊழியர் உணவில் எச்சில் துப்பிய சம்பவம், பாதி உணவை சாப்பிட்டுவிட்டு அந்த பேக்கிங்கை வாடிக்கையாளரிடம் கொடுத்த சம்பவம் என நிகழ்ந்த தவறுகளை அடுக்கி கொண்டே போகலாம். அது போல் இந்தி குறித்த சர்ச்சையும் இந்த உணவு டெலிவரி நிறுவனத்தால் நிகழ்ந்துள்ளது.

வித்தியாசமான அனுபவம்

வித்தியாசமான அனுபவம்

ஆனால் டெல்லியில் ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளது. டெல்லியை சேர்ந்தவர் சுமித் சவுரப். இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜொமாட்டோவே டேக் செய்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ஜொமாட்டோ மூலம் தேர்டு வேவ் இந்தியாவில் காபி ஆர்டர் செய்தேன். அந்த காபியில் ஒரு சிக்கன் துண்டு இருந்தது.

தொடர்பு

தொடர்பு

இன்றுடன் உங்களுடனான தொடர்பு முடிந்தது என குறிப்பிட்டுள்ளார். இதற்கு மன்னிப்பு கேட்ட ஜொமாட்டோ, இந்த சுமித்திற்கு இலவச ப்ரோ உறுப்பினர் சேவையை வழங்கியுள்ளது. இதையும் குறிப்பிட்ட சுமித், தவறுகளை செய்துவிட்டு எல்லாரையும் நீங்கள் என்னுடைய நன்மதிப்பை பெற முடியாது என பதிவிட்டுள்ளார்.

சிக்கன்

சிக்கன்

நானே சிக்கன் துண்டை காபியில் போட்டு விட்டதாக பலர் கருத்து பதிவிடுகிறார்கள். என்னை மன்னித்துவிடுங்கள், நீங்கள் குடிக்கும் இதே பானத்தில் உங்களுக்கும் ஒரு நாள் இந்த அனுபவம் கிடைக்க பிரார்த்திக்கிறேன். நவராத்திரியின் போதும் இது போன்ற மிகப் பெரிய தவறு நடந்துள்ளது.

வெஜ் பிரியாணி

வெஜ் பிரியாணி

வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தேன், ஆனால் சிக்கன் பிரியாணி பார்சல் வந்தது. அப்போதும் இனி தவறுகள் நடக்காது என ஜொமாட்டோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது உணவகம் செய்த தவறு, இதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றது. போதும்டா இனி நமக்குள் எந்த பிசினஸும் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜொமாட்டோ மன்னிப்பு

ஜொமாட்டோ மன்னிப்பு

ஜொமாட்டோவும் தேர்டு வேவ் இந்தியாவும் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் இது போன்ற அனுபவங்களால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இது யாருடைய தவறு என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன் இனியாவது அதிகபட்ச கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+