உபேர் ஆப்பில் காட்டியது 625.. கேட்டது ரூ.1,479 .. இளம் பெண்ணை காரில் பூட்டிய டிரைவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் ஆட்டோ அல்லது காரில் புக்கிங் செய்யும்போது சில ஓட்டுனர்கள், கூடுதல் கட்டணம் கேட்டுவிட்டு அந்த கட்டணத்தை கொடுத்தால் தான் வருவார்கள்.. இல்லாவிட்டால் ஃரைடை கேன்சல் செய்வார்கள். டெல்லியில் ஒரு இளம் பெண்ணுக்கு கசப்பான சம்பவம் நடந்துள்ளது அது பற்றி பார்ப்போம்.

டெல்லி விமான நிலையத்திலிருந்து டெல்லியின் புறநகராற குருகிராமுக்கு இளம்பெண் வாடகைக் காரில் சென்றுள்ளார். ஆப்பில் காட்டப்பட்ட கட்டணத்தை விட அதிக பணம் கொடுக்க மறுத்ததால், உபேர் ஓட்டுநர் தன்னிடம தவறாக நடந்துகொண்டதுடன், தன்னை காருக்குள் பூட்டி வைத்ததாக எக்ஸ் தளத்தில் அந்த இளம் பெண் தெரிவித்துள்ளார்.

Delhi Driver

அவரது பதிவைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலை தெரிவித்தனர். இதையடுத்து, காவல்துறையினரும் இந்தச் சம்பவம் குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து குருகுரம் சென்ற இளம்பெண் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

டெல்லி விமான நிலையத்துக்கு வந்த நான், அதிகாலை 4.45 மணியளவில் குருகிராமில் உள்ள எனது வீட்டுக்குச் செல்வதற்காக உபேர் காரை முன்பதிவு செய்தேன்

பயணம் தொடங்குவதற்கு முன்பு, உபேர் செயலியில் சுமார் ரூ.625 கட்டணம் காட்டியது. ஆனால், பயணம் முடிந்ததும், ஓட்டுநர் ஆப்பில் காட்டப்பட்ட ரூ.1,479 கட்டண விவரத்தின் ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டி, அதே தொகையைச் செலுத்துமாறு கேட்டுள்ளார்.

அந்த ஸ்கிரீன்ஷாட் ரேபிடோ செயலியிலிருந்து எடுக்கப்பட்டது என்றும், உபேர் செயலியில் காட்டப்பட்ட கட்டணம் அதுவல்ல என்று நான் சுட்டிக்காட்டினேன். இருப்பினும், அந்த வழித்தடத்துக்கு ரேபிடோவில் காட்டப்பட்ட அதே கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று ஓட்டுநர் வற்புறுத்தினார். இதற்கு நான் ஏற்கெனவே ரூ.625 செலுத்திவிட்டதாகத் தெரிவித்தேன்.

இதையடுத்து, ஓட்டுநர் காரைப் பூட்டிவிட்டு, ரூ.1,479 செலுத்தினால்தான் எனது உடைமைகளை எடுத்துக்கொள்ள அனுமதிப்பேன் என்று கூறினார். எனினும் நான் எனது உடைமைகளை எடுக்க முயன்றபோது, ஓட்டுநர் எனது கையைப் பிடித்ததுடன், அவற்றை எடுக்க முடியாதபடி முன்பக்க ஜன்னலையும் மூடினார்.

இறுதியில், ஒருவழியாக எனது உடைமைகளை எடுத்துக்கொண்டேன். பின்னர் எனது வீட்டுக்குள் செல்ல முயன்றபோது, ஓட்டுநர் என்னைப் பின்தொடர்ந்து வந்து தகாத வார்த்தைகளால் திட்டினார். அதோடு நிற்காமல், எனது வீட்டின் கேட்டின் மீது ஏறவும் முயன்றதுடன், மிரட்டலும் விடுத்தார்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உபேர் நிறுவனத்தின் கஸ்டமர்கேர் பிரிவையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டு, உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். மேலும், தனது பயணம் தொடர்பான விவரங்கள் மற்றும் ஓட்டுநரின் பதிவுகளைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அவரது பதிவுக்குப் பதிலளித்த பலரும், உபேர் நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து உபேர் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்தச் சம்பவத்தில் விவரிக்கப்பட்டுள்ள நடத்தை மிகவும் கவலைக்குரியது. இதுபோன்ற செயல்களுக்கு உபேர் தளத்தில் இடமில்லை. இத்தகைய நடத்தை எங்களது சமூக வழிகாட்டுதல்களை மீறுவதாகும். எனவே, அந்த ஓட்டுநர் உபேர் செயலியைப் பயன்படுத்துவதற்கான அணுகலை நீக்கியுள்ளோம். சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குத் தேவையான எந்தத் தகவலையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்தப் பெண்ணைத் தொடர்புகொள்ள முயற்சி செய்து வருவதாகவும், அவர் புகார் அளித்த பின்னர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், "அந்தப் பெண்ணிடமிருந்து இதுவரை எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை. இருப்பினும், அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவை கவனத்தில் எடுத்துக்கொண்டு, இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+