டெல்லி எக்ஸிட் போல்: சமூகம் வாரியாக அரசியல் கட்சிகள் பெறும் வாக்குகள் எவ்வளவு? Axis My India கணிப்பு
டெல்லி: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் சமூகம் வாரியாக அரசியல் கட்சிகள் எவ்வளவு வாக்குகளை பெறும் என்கிற கணிப்பை Axis My India வெளியிட்டிருக்கிறது.
இந்த முறை 602 ஆண் வேட்பாளர்கள், 96 பெண் வேட்பாளர்கள், 1 மாற்று பாலினத்தவர் என மொத்தம் 699 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கினர். இதற்கு முன்னர் கடந்த 2020ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 668 வாக்காளர்கள் இருந்தனர். அதை ஒப்பிடும்போது இந்த முறை 31 வேட்பாளர்கள் அதிகம்.

அரசியல் நிலவரத்தை பொறுத்தவரையில், என்னதான் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தலைநகர் டெல்லியில் ஆட்சியை பிடிக்கவில்லையே என்று பாஜகவுக்கு நீண்ட காலமாக ஏக்கம் இருந்து வந்தது. எனவே இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பாஜக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. மறுபுறம் ஆம் ஆத்மிக்கும் கடுமையான நெருக்கடி இருந்தது.
குறிப்பாக கட்சியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்தது. அதாவது டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் பலர் மீதும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அதேபோல இந்த வழக்கில் ஒட்டுமொத்த கட்சியின் மீதே விசாரணை அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன. இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சியின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இதுதான் முதல் முறை. அதேபோல முதலமைச்சராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதும் அரவிந்த் கெஜ்ரிவால் விஷயத்தில்தான் நடந்தது.
இவையெல்லாம் இந்த தேர்தலில் எதிரொலித்தன. டெல்லியை பொறுத்தவரை 83.49 லட்சம் ஆண்கள், 71.74 லட்சம் பெண்கள் மற்றும் 1,267 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் 2.08 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்களாவார்கள்.
இந்நிலையில் எந்த கட்சிகளுக்கு எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக வாக்குகளை அளித்திருக்கிறார்கள் என்கிற விவரத்தை Axis My India வெளியிட்டிருக்கிறது. அதன்படி பாஜக கூட்டணிக்கு அனைத்து சமூகத்தினர் ஓட்டும் 48% என்கிற அளவில் இருக்கிறது. தனித்தனியாக பார்த்தால்,
பால்மிகி - 35
ஜாதவ் -28
தலித்(SC) -39
ஜாட் -63
குஜ்ஜர் -56
ஓபிசி -58
முஸ்லீம் -5
பஞ்சாபி -46
பிராமணர் -66
ராஜ்புத் -61
சீக்கியர் -24
பொது -68
மற்றவர்கள்-47
ஆம் ஆத்மி கட்சியை பொறுத்த அளவில், அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் 42% பதிவாகியுள்ளன.
பால்மிகி - 53
ஜாதவ் -60
தலித்(SC) -51
ஜாட் -28
குஜ்ஜர் -37
ஓபிசி -34
முஸ்லீம் -74
பஞ்சாபி -45
பிராமணர் -27
ராஜ்புத் -32
சீக்கியர் -69
பொது -25
மற்றவர்கள்-42
காங்கிரஸ் கட்சியை பொறுத்த அளவில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் 7% பதிவாகியுள்ளன.
பால்மிகி - 10
ஜாதவ் -7
தலித்(SC) -8
ஜாட் -6
குஜ்ஜர் -5
ஓபிசி -6
முஸ்லீம் -15
பஞ்சாபி -6
பிராமணர் -4
ராஜ்புத் -5
சீக்கியர் -3
பொது -5
மற்றவர்கள்-7
என வாக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர்தான் உண்மை நிலவரம் தெரிய வரும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications