போராட்டங்களுக்கு நடுவே விடியலை எதிர்நோக்கி காத்திருக்கும் டெல்லி மக்கள்.. நாளை விடியல் முக்கியம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாளைய செவ்வாய்கிழமை வழக்கமாக விடியப்போகும் நாள் அல்ல டெல்லி மக்களுக்கு.. போராட்டங்களுக்கு நடுவே விடியலை நோக்கி காத்திருக்கும் டெல்லி மக்களுக்கு நாளை விடியல் முக்கியமானது. ஆம்! அவர்களின் ஆள் காட்டி விரல் அடையாளம் காட்டியவரே ஆளப்போவதை அறிவிக்க போகும்நாள். டெல்லி சட்டசபை தேர்தலை முடிவுகள் வெளியாகும் நாள்.

டெல்லி என்பது இந்தியாவின் தலைநகரம் என்பதற்காக மட்டும் நாளை சட்டமன்ற தேர்தல் முக்கியமாக பார்க்கப்படவில்லை.

அமித்ஷா சொன்னதைப் போல் இரண்டு சிந்தாந்தங்களுக்கு நடுவில் நடக்கும் போர். இதில் வெல்லப்போவது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியா அல்லது மோடியின் பாஜகவா என்பதே பெரும் கேள்வி.

பதற்றமாக டெல்லி

பதற்றமாக டெல்லி

மற்ற நகரங்களைப் போல் டெல்லியும் அண்மைக்காலம் வரை அமைதியாகவே இருந்தது. ஆனால் எப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் துவங்கியதோ அப்போது முதலே ஒரு பதற்றத்துடனே இருக்கிறது. டெல்லியில் ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் தொடங்கி, ஷாஹீன் பாக் மட்டுமல்ல, நாடாளுமன்றம் வரை போராட்ட களமாகவே உள்ளது. இந்த போராட்டங்களுக்கு நடுவில் தான் டெல்லி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஆள் காட்டி விரல்

ஆள் காட்டி விரல்

டெல்லி சட்டமன்ற தேர்தலில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, பிரதமர் மோடியின் பாஜக, சோனியா காந்தியின் காங்கிரஸ் ஆகிய மும்முனை போட்டி நிலவுகிறது. 8ம் தேதி தங்களை ஆள போகிறவர்களை மக்கள் தங்கள் ஆள் காட்டி விரலில் மை வைத்து அழுத்தி தீர்மானித்துவிட்டார்கள். இதில் யாரை ஆள அனுமதிக்க போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

முக்கியமானது

முக்கியமானது

கருத்துக்கணிப்புகள் எல்லாம் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிதான் வெல்வார் என்று கணிப்புகளை வெளியிட்டு சொல்லியிருக்கின்றன. ஆனால் மக்கள் எதை கணித்திருக்கிறார்கள் என்பது நாளையே தெரியும். எனவே பிப்ரவரி 8ம் தேதி டெல்லி மக்களுக்கு முக்கியமானது. இந்த தேர்தல் முடிவு என்பது வெறும் டெல்லி மக்களுக்கு மட்டும் முக்கியமானது அல்ல..மொத்த இந்தியாவுக்கு முக்கியமானது. ஏனெனில் டெல்லி வெறும் நகரமல்ல. மொத்த இந்தியாவும் அங்கே வசிக்கிறது. டெல்லி ஒரு குட்டி இந்தியா.

காத்திருக்கும் மக்கள்

காத்திருக்கும் மக்கள்

போன முறை ஒட்டுமொத்தமாக அதவாது 70ல் 67 தொகுதிகளில் ஆம் ஆத்மி வென்றது. இந்த முறை அப்படியான ஒரு வெற்றி கிடைக்குமா என்பது தெரியவில்லை. பரிட்சை எழுதிய மாணவன் மார்க் என்ன என்பதை அறிவதற்காக காத்திருப்பதை போல் ஆம் ஆத்மி காத்திருக்கிறது. பாஜகவோ இந்த தேர்தலில் கிடைக்கும் வெற்றியை சித்தாந்த வெற்றியாக நினைக்கிறது. யாரை வெல்ல வைத்திருக்கிறார்கள் என்பதை அறிய டெல்லி மக்களை போல் நாமும் காத்திருப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+