டெல்லி தேர்தல்: 699 வேட்பாளர்களில் 5 பேர் கோடீஸ்வரர்கள்- பாஜக டாப்; 3 பேருக்கு சொத்துகளே இல்லையாம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 699 வேட்பாளர்களில் 5 பேர் ரூ100 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளவர்கள்; 3 வேட்பாளர்களுக்கு எந்த சொத்துமே இல்லை என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் கர்னைல் சிங்தான் அதிகபட்சமாக ரூ.259 கோடி சொத்து உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலில் 672 பேர் போட்டியிட்டிருந்தனர்.

delhi election 2025 delhi assembly election 2025

டெல்லி தேர்தலில் போட்டியிடும் 699 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவில் தெரிவித்துள்ள சொத்து விவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை The Association for Democratic Reforms (ADR) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள சுவாரசிய தகவல்கள்

699 வேட்பாளர்களில் பாஜகவின் கர்னைல் சிங்தான் அதிகபட்சமாக ரூ.259 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக மொத்தம் 5 வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூ.50 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக மொத்தம் 23 வேட்பாளர்கள்- அதாவது 3% வேட்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலில் ரூ.50 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக 2% வேட்பாளர்கள் கூறியிருந்தனர்.

delhi election 2025 delhi assembly election 2025

அதேநேரத்தில் ரூ.10 லட்சத்துக்கும் குறிஅவான சொத்துகள் இருப்பதாக மொத்தம் 222 வேட்பாளர்கள் - அதாவது 31.76% வேட்பாளர்கள் கூறியுள்ளனர்.

அதிக சொத்து மதிப்புள்ள வேட்பாளர்கள்:
பாஜகவின் கர்னைல்சிங் - ரூ. 259.67 கோடி
பாஜகவின் மஜிந்தர் சிங்- ரூ. 248.85 கோடி
காங்கிரஸின் குருசரண் சிங்- ரூ. 130.90 கோடி
பாஜகவின் பர்வேஷ் ஷாகிப் சிங் வர்மா ரூ.115.63 கோடி
ஆம் ஆத்மியின் தன்வரி சந்தேலா ரூ. 109.90 கோடி

ராஷ்டிரிய ரிபப்ளிக்கன் கட்சியின் ஷபானா, சுயேட்சை வேட்பாளர் யோகேஷ் குமார் உள்ளிட்ட 3 பேர் தங்களுக்கு சொத்துகள் எதுவுமே இல்லை என தெரிவித்துள்ளனர்.

சுயேட்சை வேட்பாளர் அசோக் குமார் தமக்கு ரூ. 6,586 மதிப்பிலான சொத்து மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார்; மற்றொரு சுயேட்சை வேட்பாளர் அனிதா தமக்கு ரூ. 9,500 சொத்துதான் இருக்கிறது என கூறியுள்ளார்.

சராசரியாக பாஜக வேட்பாளர்களின் சொத்து மதிப்பு ரூ22.90 கோடி; அடுத்ததாக காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 14.41 கோடி; ஆம் ஆத்மி வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 11.70 கோடி.

டெல்லி தேர்தலில் போட்டியிடும் 699 வேட்பாளர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3,952 கோடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+