டெல்லி தேர்தல்: சிஏஏ போராட்டங்களின் போது வன்முறைக்கு காரணமான கபில் மிஸ்ராவுக்கு பாஜக 'சீட்'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 2020-ம் ஆண்டு சி.ஏ.ஏ.வுக்கு எதிரான மக்கள் போராட்டங்களின் போது மிக பயங்கரமான வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கபில் மிஸ்ராவும் இடம் பெற்றிருப்பது சர்ச்சையாகி உள்ளது. கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சுகளால்தான் 2020-ம் ஆண்டு டெல்லியில் மிகப் பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதாக பாஜக தலைவர்களே கண்டனம் தெரிவித்த நிலையில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பருக்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், ஜைனர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வகை செய்ததுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ). இந்த சட்டம் மத அடிப்படையிலானது; மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தக் கூடியது என்பதால் 2020-ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.

delhi assembly election 2025 bjp kapil mishra 2025

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில் தொடங்கிய சிஏஏ எதிர்ப்புப் போராட்டம் தலைநகர் டெல்லியில் மையம் கொண்டு தீவிரமாக நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது மிகப் பெரிய அளவில் பயங்கர வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் நிகழ்ந்தன. இந்த வன்முறையின் போது அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் பாஜகவின் கபில் மிஸ்ரா. அவர்தான் சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில், சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட வேண்டும் என்ற வகையில் பேசியவர். கபில் மிஸ்ராவின் இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்களே கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக- 70 தொகுதிகளிலும் பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் களத்தில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஆளும் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் பாஜக 2 கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாஜக நேற்று வெளியிட்ட 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 2020-ல் டெல்லி வன்முறையை தூண்டிவிட்ட கபில் மிஸ்ராவின் பெயரும் இடம் பெற்றிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+