டெல்லியில் நாளை தேர்தல்: கெஜ்ரிவால், அதிஷி, மணீஷ் சிசோடியா.. எதிர்பார்ப்புக்குரிய 5 விஐபி தொகுதிகள்!
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு நாளை (பிப்ரவரி 5) நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். டெல்லி தேர்தல் களத்தில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போதைய முதல்வர் அதிஷி, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் பெரும் கவனம் பெற்றுள்ளன.
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன. டெல்லி தேர்தல் களத்தில் அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

டெல்லி தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இத்தேர்தல் களத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
டெல்லியில் 5 விஐபி தொகுதிகள் கவனம் பெற்றுள்ளன. புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜகவின் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, காங்கிரஸின் சந்தீப் தீட்சித் களமிறங்குகின்றனர்.
2013-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸிடம் இருந்து புதுடெல்லி தொகுதியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. 2013, 2015, 2020 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து 3 முறை அரவிந்த் கெஜ்ரிவால் இத்தொகுதியில் வாகை சூடி இருக்கிறார். 2013-ம் ஆண்டு தேர்தலில் 15 ஆண்டுகாலம் முதல்வராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவரான ஷீலா தீட்சித்தை 25,864 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்திருந்தார் கெஜ்ரிவால். தற்போது இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் போட்டியிடுகிறார். 2008-ல் இத்தொகுதியில் ஷீலா தீட்சித் வென்றிருந்தார்.
டெல்லி முதல்வர் அதிஷி போட்டியிடும் தொகுதி கால்காஜி. இத்தொகுதியில் அதிஷிக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி களம் காண்கிறார். காங்கிரஸ் வேட்பாளராக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா போட்டியிடுகிறார். 2015, 2020 தேர்தல்களில் ஆம் ஆத்மி தொடர்ந்து வென்ற தொகுதி இது.
ஜங்புரா தொகுதியில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா போட்டியிடுகிறார். டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தமது பதவியை இழந்தவர் மணீஷ் சிசோடியா. இவருக்கு எதிராக பாஜகவின் தர்விந்தர் சிங் வர்வா, காங்கிரஸின் பர்ஹாத் சூரி போட்டியிடுகின்றனர். 2013-ம் ஆண்டு முதல் இத்தொகுதியில் ஆம் ஆத்மி கட்சிதான் வெற்றி பெற்று வருகிறது.
இதேபோல ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய மாஜி அமைச்சர் கைலாஷ் கெலோட் போட்டியிடும் பிஜ்வாசன், மணீஷ் சிசோடியா முன்னர் வென்ற பட்பர்கஞ்ச் ஆகிய தொகுதிகளும் டெல்லி தேர்தல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி தேர்தலில் மொத்தம் 699 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். டெல்லியில் மொத்த வாக்காளர்கள் 1,55,24,858 பேர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications