Delhi Exit Poll 2025: ஆம் ஆத்மியை துடைத்தெறியும் பாஜக.. POLL DIARY வெளியிட்ட கணிப்பு!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் 42 முதல் 50 தொகுதிகள் வரை பாஜக கைப்பற்றும் என்று POLL DIARY கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி 18 முதல் 25 தொகுதிகள் வரையிலும், காங்கிரஸ் கட்சி 0 முதல் 2 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெற்றது. 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது.

பாஜகவை பொறுத்தவரை 28 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியை பிடிக்க முடியாமல் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி POLL DIARY வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி 70 தொகுதியை கொண்ட டெல்லி சட்டசபையில் பாஜக 42 முதல் 50 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்று கணித்துள்ளது.'
அதேபோல் ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை 18 முதல் 25 தொகுதிகள் வரை வெல்லும் என்றும், காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 0 முதல் 2 தொகுதிகள் வரையும், பிற கட்சிகள் 0 முதல் 2 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புகள் இருப்பதாக கணித்துள்ளது. இதனால் டெல்லியில் நீண்ட இடைவெளிக்கு பின் பாஜக ஆட்சி அமையும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலின் போதே டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. தற்போது சட்டசபை தேர்தலிலும் பாஜக வென்று ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பெரும்பான்மை கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியால் 3 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஆம் ஆத்மி கட்சியால் கடந்த முறை போல் இம்முறை வெல்ல வாய்ப்புகள் குறைவு என்றும் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications