டெல்லியில் கெஜ்ரிவால் கட்சி படுதோல்வி.. வெற்றிக்கொடி ஏற்றும் பாஜக! ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல்
டெல்லி: தேசிய தலைநகரான டெல்லியில் நேற்று கடந்த பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே டெல்லி தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்த முறை பாஜக 45-55 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வரும் சூழலில், அதிஷி முதல்வராக இருக்கிறார். அங்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மியே ஆட்சியில் உள்ள நிலையில், அதைத் தக்கவைக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி களமிறங்கியது.

இருப்பினும், தலைநகர் டெல்லியில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது. இந்த இரு கட்சிகளைத் தவிரக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியில் உள்ளன.
அங்கு மொத்தம் 70 சட்டசபை இடங்கள் உள்ள சூழலில், குறைந்தது 36 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியை அமைக்கும். நேற்று பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் சனிக்கிழமை பிப்ரவரி 8ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதற்கிடையே ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியை அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 70 இடங்களில் 45-55 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி 15- 25 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் 0-1, இதர கட்சிகள் 0-1 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஆக்சிஸ் மை இந்தியா சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications