டெல்லி எக்ஸிட் போல்: பாஜக கனவில் மண் விழும்..4-வது முறையாக கெஜ்ரிவால் ஆட்சிதான்- ஆம் ஆத்மி நம்பிக்கை
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகளில் பெரும்பாலானவை 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக ஆட்சி அமையும் என தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது; டெல்லியில் 4-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைப்பார்; அதுதான்நடக்கும்; எக்ஸிட் போல் முடிவுகள் பொய்யாகவே அமையும் என ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

டெல்லி தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. இதுவரை வெளியிடப்பட்ட பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக டெல்லியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. டெல்லியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 36. ஆனால் டெல்லி தேர்தலில் பாஜக 45 இடங்களை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாக எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் நடுத்தர வர்க்க வாக்காளர்கள் அதிகம்; அவர்களை குறிவைத்து பாஜக இடைவிடாது முன்னெடுத்த பிரசாரம்; வாக்குறுதிகள்; பெண்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ஆகியவை பாஜகவுக்கு கை கொடுக்கும் என்கிற நம்பிக்கை அக்கட்சியினருக்கு இருக்கிறது. மேலும் யமுனை நதிநீரை பாஜக நச்சாக்கிவிட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் இந்தியா கூட்டணி கட்சிகளான ஆம் ஆத்மியும் காங்கிரஸும் பிரிந்து நின்று தேர்தலை எதிர்கொண்டதால் பாஜக எளிதாகவே வெல்லும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்கின்றனர் தேர்தல் வியூக வல்லுநர்கள்.
ஆனால் எக்ஸிட் போல் முடிவுகளை ஒருபோதும் ஏற்க முடியாது; எக்ஸிட் போல் முடிவுகள் பொதுவாக பொய்யாகவே அமைந்துவிடுகின்றன; டெல்லியில் 4-வது முறையாக ஆம் ஆத்மி ஆட்சியை அரவிந்த் கெஜ்ரிவால் அமைப்பார்; டெல்லி தேர்தல் களத்தில் ஹாட்ரிக் வெற்றியை ஆம் ஆத்மி அறுவடை செய்யும் என்கின்றனர் அக்கட்சி தலைவர்கள்.
அதேநேரத்தில் 2015, 2020-ல் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தல்களின் போது வெளியிடப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் பெரும்பான்மையானவை, ஆம் ஆத்மிதான் ஆட்சி அமைக்கும் என கணித்திருந்தன. அதே போல ஆம் ஆத்மியும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications