ஜெகஜால கில்லாடி.. கணவன் இருக்கும்போதே.. காலையிலேயே அதிரும் தலைநகர்.. ஹோட்டல் ஓனர் மனைவி செய்த காரியம்
டெல்லி: 22 வயது இளைஞனை மார்ச் மாதம் 31ம் தேதியிலிருந்தே காணவில்லை.. இந்த இளைஞனை தேடப்போய் கடைசியில் 2 பேர் கைதாகி உள்ளனர். என்ன நடந்தது டெல்லியில்?
தலைநகர் டெல்லியில், கன்னாட் பிளேஸ் பகுதியில் அந்த பிரபல ரெஸ்டாரெண்ட் செயல்பட்டு வருகிறது.. இங்கு வேலை பார்த்து வந்தவர் 22 வயது சச்சின். ஆனால், திடீரென சச்சின் வேலையை விட்டு நின்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த 31ம் தேதி முதல் திடீரென சச்சினை காணவில்லை. இது தொடர்பான போலீசார் விசாரணையை மேற்கொண்டபோதுதான், சச்சின் குமாரின் சடலம், உத்தரப்பிரதேசத்தின் தஸ்னாவில் இருந்து மீட்டனர்.. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை மேலும் தீவிரமானது..
மிரட்டல்: அதன்படி, சச்சினின் செல்போன்களை போலீசார் ஆராய்ந்தபோது, சச்சின் ஏற்கனவே வேலைபார்த்த ரெஸ்டாரண்ட் ஓனர் ஹஷிப் கான் என்பவரும், அவரது ஷமினா பேகம் இருவருமே சிக்கினார்கள்.
அதாவது, ரூ.2 லட்சம் ரூபாய் கேட்டு கானிடம் சச்சின் தன்னை மிரட்டியதாகவும், அந்த ஆத்திரத்தில்தான் கொன்றுவிட்டதாகவும் போலீசில் கான் கூறினார். ஆனாலும், போலீசார் இந்த விஷயத்தில் வேறுமாதிரியாக தீவிரம் காட்டியதையடுத்து, அந்த கள்ளக்காதல் விவகாரம் சிக்கியது.
சச்சின்: கொலை செய்யப்பட்ட சச்சின், ஓனர் மனைவி பேகத்துடன் தகாத உறவில் இருந்தாராம்.. இவர்கள் 2 பேரும் முறையற்ற உறவு கொண்டிருப்பதை கண்ணெதிரரிலேயே கான் பார்த்து விட்டாராம். இந்த ஆத்திரத்தில்தான், சச்சின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
இதுகுறித்து சச்சினின் சகோதரர் மோஹித் சொல்லும்போது, "என்னுடைய தம்பி சச்சின், கானின் கம்பெனியில், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தார். கடந்த பிப்ரவரியில், பணப்பிரச்சினை காரணமாக வேலையை விட்டுவிட்டார்... வேலை பார்த்தபோது 2 லட்ச ரூபாயை என்னுடைய தம்பி, கானிடம் கடன் வாங்கியிருந்தார். அதில், ரூ. 1 லட்சத்தை திருப்பி தந்துவிட்டார்.. மிச்ச பணத்தை கேட்டு, கானும், அவரது மனைவி பேகமும் மிரட்டி கொண்டேயிருந்தனர்.
வாக்குவாதம்: சம்பவத்தன்று அதாவது, மார்ச் 31ம்தேதி, தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று சொல்லி, பேகம் என் தம்பியை அழைத்தார்.. அதை நம்பி என் தம்பி சென்றபோது, கணவருடன் சேர்ந்து என் தம்பியின் கழுத்தை அறுத்து கொன்று, சடலத்தை அவர்களுடைய மாருதி காரிலேயே எடுத்துக்கொண்டுபோய் தஸ்னா காட்டில் வீசியிருக்கிறார்கள்.
ஆனால், இது தெரியாத நாங்கள், வேலை முடிந்து தம்பி இன்னும் வீட்டுக்கு வராமல் போனதால், பல இடங்களில் தேடினோம்.. என் தம்பியின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.. அதற்குபிறகுதான் கொலை விஷயமே எங்களுக்கு தெரியவந்தது" என்றார்.
பணத்தகராறு: தற்போது போலீசார், சம்பவ இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பல்வேறு சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, அதில் பதிவான தம்பதிகளின் காட்சிகளை கைப்பற்றி உள்ளனர். தம்பதி இருவரும் கைதாகி இருக்கிறார்கள்.. பணத்தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டதாக காரணம் சொல்லப்பட்டாலும், ஒருபக்கம் கணவனுக்கு ஆதரவாகவும் இருந்து கொண்டு, மற்றொருபக்கம் கள்ளக்காதலனையும் சிக்கவைத்து கொன்றுள்ளார் பேகம்..!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications