நாங்க வருவோம்.. டெல்லி விவசாய போராட்டத்தில் களமிறங்கிய மாணவர்கள்.. பெருகும் ஆதரவு!

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் உதவி செய்வதற்காக, அங்கு படிக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் களமிறங்கி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லி மக்களை திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயிகளின் போராட்டம்- வீடியோ

    டெல்லி: டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் உதவி செய்வதற்காக, அங்கு படிக்கும் கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள் களமிறங்கி உள்ளனர்.

    இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் இன்று விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இவர்கள் திரண்டு உள்ளனர்.

    4 லட்சம் விவசாயிகள் வரை போராட்ட களத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.

    உதவி செய்கிறார்கள்

    உதவி செய்கிறார்கள்

    இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழகம், ஜேஎன்யூ ஆகிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் விவசாயிகளுக்கு உதவுவதற்காக போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளனர். விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவது, உணவு வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இவர்களின் செயலை பார்த்து டெல்லி மக்கள் சிலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

    சிலர் போராட்டம் செய்கிறார்கள்

    சிலர் போராட்டம் செய்கிறார்கள்

    இதில் சில மாணவர்கள் விவசாயிகளுடன் சேர்ந்து போராடுவதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். விவசாயிகளுக்காக நாங்கள் போராடாமல் வேறு யார் போராடுவார்கள் என்று இவர்கள் களத்தில் இறங்கி உள்ளனர். இவர்களின் செயல் டெல்லி மக்களை பெரிதும் கவர்ந்து உள்ளது.

    எய்ம்ஸ் மாணவர்கள்

    எய்ம்ஸ் மாணவர்கள்

    அதேபோல் எய்ம்ஸ் பல்கலைக்கழக மாணவர்களும் இவர்களுக்கு உதவ வந்துள்ளனர். இவர்கள் அங்குள்ள வயசான விவசாயிகளுக்கு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார்கள். நேற்று இரவு முழுக்க விவசாயிகள் தூங்கவில்லை என்பதால், அவர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவ இவர்கள் வந்துள்ளனர்.

    இவர்கள் எல்லோரும் யார்

    இந்த மாணவர்களுக்கு இடையே சில ஒற்றுமையும் இருக்கிறது. இந்த மாணவர்கள் எல்லோரும் இடதுசாரி அமைப்பை சேர்ந்த மாணவ இயக்கங்களை சேர்ந்தவர்கள். எஸ்எஃப்ஐ, ஐஸா உள்ளிட்ட மாணவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் இவர்கள். ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+