Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டெல்லியில் தாமரை மலராத இடமே இல்லை.. ஆம் ஆத்மி விரட்டி அடிக்கப்பட்டது”.. குஷியாக பேசிய பிரதமர் மோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, பாஜக சார்பில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “டெல்லியில் தாமரை மலராத பகுதியே இல்லை. எல்லா மொழி பேசும் மக்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

டெல்லியில் அதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. 70 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 60.42 சதவீத வாக்குகள் பதிவாகின. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது.

delhi election 2025 delhi election result 2025 narendra modi 2025 2025

இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், பாஜக 48 இடங்களில் வென்றுள்ளது. ஆம் ஆத்மி 22 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. பாஜக வெற்றியை உறுதி செய்து விட்ட நிலையில், பாஜக ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாஜகவின் தலைமை அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் உரையாற்றினர்.

அப்போது, "இன்று டெல்லி மக்களின் மனதில் உற்சாகமும் நிம்மதியும் நிலவுகிறது. மோடியின் உத்தரவாதத்தில் நம்பிக்கை வைத்த டெல்லி மக்களுக்கு நான் தலை வணங்கி நன்றி கூறுகிறேன். டெல்லி மக்களுக்கு நன்றி. டெல்லி எங்களுக்கு முழு மனதுடன் அன்பை வழங்கியுள்ளது. இரட்டிப்பு அன்பை நாங்கள் வளர்ச்சி என்ற வடிவத்தில் உங்களுக்கு திருப்பித் தருவோம் என்று மக்களுக்கு மீண்டும் உறுதியளிக்கிறேன்" என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி, “மக்களவைத் தேர்தலில் டெல்லி மக்கள் என்னை ஒருபோதும் ஏமாற்றியதில்லை. 2014, 2019 மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில், டெல்லி மக்கள் 7 இடங்களிலும் பாஜகவை வெற்றி பெறச் செய்தனர். இன்றைய வெற்றி வரலாற்றுந் சிறப்பு மிக்கது. இது சாதாரண வெற்றி அல்ல. டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியை விரட்டியடித்துவிட்டனர்.

டெல்லி ஆம் ஆத்மி பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மக்களின் உத்தரவு மிகத் தெளிவாக உள்ளது. இன்று, டெல்லியில் வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை மற்றும் நம்பிக்கை வென்றுள்ளது. இன்று, டெல்லியை சூழ்ந்திருந்த ஆடம்பரம், அராஜகம், ஆணவம் ஆகியவை தோற்கடிக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றிக்காக ஒவ்வொரு பாஜக தொண்டரையும் உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.

நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களின் இதயங்களிலும் ஒரு வலி இருந்ததை நான் உணர்ந்தேன். டெல்லிக்கு பாஜகவால் முழுமையாக சேவை செய்ய முடியாதது பற்றி அனைவருக்கும் கவலை இருந்தது. ஆனால் இன்று டெல்லி எங்கள் கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டுள்ளது. 21 ஆம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள் இப்போது டெல்லியில் பாஜகவின் நல்லாட்சியை முதல் முறையாகக் காண்பார்கள்.

பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் மீது நாடு எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறது என்பதை இன்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களவைத் தேர்தலில் அந்த வெற்றிக்குப் பிறகு, முதலில் ஹரியானாவில் மிகப்பெரிய சாதனையைப் படைத்தோம், பின்னர் மகாராஷ்டிராவில் ஒரு புதிய சாதனையைப் படைத்தோம். இப்போது டெல்லியில் ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

இன்று டெல்லி மக்கள் தெளிவாக ஒன்றை உணர்த்தி உள்ளனர். டெல்லியின் உண்மையான உரிமையாளர்கள் டெல்லி மக்கள் மட்டுமே. டெல்லியின் உரிமையாளர்கள் என்று நினைத்தவர்கள் உண்மையை அறிந்து கொண்டுள்ளளனர். அரசியலில் குறுக்கு வழிகள், பொய்களுக்கு இடமில்லை என்பது டெல்லி மக்களின் விருப்பத்தில் இருந்து தெளிவாகிறது. குறுக்குவழி அரசியலின் சகாப்தத்தை மக்கள் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டனர்.

நமது டெல்லி வெறும் நகரம் மட்டுமல்ல, அது ஒரு மினி இந்தியா. டெல்லியில் தாமரை மலராத பகுதியே இல்லை. எல்லா மொழி பேசும் மக்களும் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். டெல்லிவாசிகளான நீங்கள் அனைவரும் இன்று டெல்லியின் வளர்ச்சியில் இருந்த ஒரு பெரிய தடையை நீக்கிவிட்டீர்கள்.

இந்தத் தேர்தலின்போது நான் எங்கு சென்றாலும், நான் பூர்வாஞ்சலின் எம்.பி. என்று பெருமையுடன் சொன்னேன். பூர்வாஞ்சல் மக்கள் அன்பையும், நம்பிக்கையையும், புதிய ஆற்றலையும் புதிய பலத்தையும் அளித்துள்ளனர். எனவே, பூர்வாஞ்சலின் எம்.பி.யாக, பூர்வாஞ்சல் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+