டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு - கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளர்.

Google Oneindia Tamil News

டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வேறு வழியில்லாமல் இந்த முடிவினை அறிவித்துள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு.. Delhi-ல் ஒரு வாரம் முழு ஊரடங்கு

    இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களையும் கொரோனா இரண்டாம் அலை சூறையாடி வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தலைநகர் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

    Delhi govt announces curfew from tonight till next Monday morning

    ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி, தடுப்பூசி பற்றாக்குறை என பல்வேறு வகை தாக்குதல்களுக்கு அம்மாநில அரசுகள் ஆளாகியிருக்கின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அஸ்திரத்தைக் கையிலெடுத்திருக்கின்றன.

    ஆரம்பத்தில் இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிராவில் நிலைமை மிக மோசமாகப் போனதால் இந்தியாவின் முதல் மாநிலமாக மீண்டும் அனைத்து நாட்களிலும் முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.

    இம்மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது டெல்லியிலும் இன்று நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வரை ஒரு வார காலம் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இன்று இரவு தொடங்கி வரும் 26ஆம் தேதி வரை டெல்லியில் முழு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    கொரோனா தடுப்பூசி.. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்- சென்னை ஹைகோர்ட் உத்தரவுகொரோனா தடுப்பூசி.. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்- சென்னை ஹைகோர்ட் உத்தரவு

    முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனியும் மருத்துவமனைகளில் கூடுதல் சுமையை ஏற்க முடியாத சூழ்நிலையில் வேறு வழியின்றி இந்த முழு நேர லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    இது சிறிய அளவிலான லாக்டவுன் என்பதால் புலம் பெயர் தொழிலாளர்கள் யாரும் டெல்லியை விட்டு செல்ல வேண்டாம் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

    English summary
    The Delhi government announced a curfew from Monday night till next Monday morning in another attempt to arrest the rising cases of the covid 19 officials said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X