டெல்லி கட்டிட இடிப்பு.. இடைக்கால தடை நீட்டிப்பு.. 2 வாரங்களுக்கு வழக்கு ஒத்திவைப்பு -உச்ச நீதிமன்றம்
டெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டிடங்களை கட்டியதாக கூறி நேற்று பல்வேறு கட்டிடங்கள் வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த விசாரணையில் மனுதாரர் தரப்பு வாதத்திற்கு பின் இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டு, வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்கு பின்பாகவே இந்த கட்டுமான இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற கலவரங்களுக்கு பின்பாக பல்வேறு இடங்களில் கலவரக்காரர்கள் வீடுகள் என்று கூறப்பட்டு பல வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன.
இதில் பெரும்பாலும் இஸ்லாமியர்களின் கடைகள், வீடுகள் மட்டுமே இடிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியின் போது இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே மோசமான கலவரம் ஏற்பட்டது.

இடிக்கப்பட்டது
வன்முறையை தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் கலவரக்காரர்களின் வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கலவரம் செய்து, ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடும் கட்டி இருப்பவர்களின் கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிட இடிப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கபில் சிபல்
அதேபோல் ஜாமியா உலமா ஐ ஹிந்த் அமைப்பு மூலம் இன்னொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மனுதாரர் சார்பாக ஆஜரான கபில் சிபல், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் வீடுகள், கட்டிடங்கள் இடிக்கப்பட்டது குறித்தும் விசாரிக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நேற்று இந்த மனு அவசரமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா முன் விசாரணைக்கு வந்தது.

என்ன சொன்னார்?
அதில் வழக்கறிஞர் தேவ், இந்த கட்டுமானங்களை முறையின்றி இடிக்கிறார்கள். இது தவறு. சட்டத்தை மீறி நோட்டீஸ் கூட கொடுக்காமல் அங்கு கட்டுமானத்தை இடிக்கிறார்கள். இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளை அகற்ற உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்தது. ஆனால் தடைக்கு பின்பாகவும் அங்கு தொடர்ந்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவு கையில் வரவில்லை என்று கூறி தொடர்ந்து கட்டிடங்கள் அங்கு இடிக்கப்பட்டது. அதில் வழக்கறிஞர் தேவ், இந்த கட்டுமானங்களை முறையின்றி இடிக்கிறார்கள். இது தவறு. சட்டத்தை மீறி நோட்டீஸ் கூட கொடுக்காமல் அங்கு கட்டுமானத்தை இடிக்கிறார்கள். இதையடுத்து ஆக்கிரமிப்பு நிலங்களில் கட்டப்பட்டு இருக்கும் வீடுகளை அகற்ற உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்தது. ஆனால் தடைக்கு பின்பாகவும் அங்கு தொடர்ந்து கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவு கையில் வரவில்லை என்று கூறி தொடர்ந்து கட்டிடங்கள் அங்கு இடிக்கப்பட்டது.
Recommended Video

விளக்கம்
இதையடுத்து உடனடியாக மீண்டும் வழக்கறிஞர் தேவ், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இதன்பின் தலைமை நீதிபதி ரமணா, உடனே கோர்ட் உத்தரவு மாநகராட்சி அதிகாரிகளுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு கட்டுமான இடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், பிஆர் காவாய் ஆகியோர் அமர்வு இன்று வழக்கை விசாரணை செய்தனர்.

வாதம்
அதில் வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் இன்று உச்ச நீதிமன்றத்தில் வாதம் செய்தார். அதில், டெல்லி ஜஹாங்கிர்புரியில் கட்டிடத்தை இடிப்பது ஒரு நகரத்தின் பிரச்சனையல்ல, நாட்டின் பிரச்சனை. டெல்லியில் கட்டிடம் இடிக்கப்பட்டது இந்த சமுதாயத்தின் பிரச்சனை. இதை நாம் அனுமதித்தால், பின்னர் நாட்டில் சட்டம் இருக்காது, என்று குறிப்பிட்டார். இஸ்லாமியர்கள் வீடுகள் மட்டும் குறி வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கபில் சிபல் குறிப்பிட்டார்.

ஒத்திவைப்பு
அரசு தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, எல்லா சமயங்களிலும் கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் நாங்கள் நோட்டீஸ் கொடுத்தோம். சாலைகளில் மக்கள் நடக்க கூடிய இடங்களில் உள்ள கடைகள் மட்டுமே அகற்றப்பட்டு இருக்கிறது. இவர்களின் வாதங்களை குறித்துக்கொண்டு நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். அதுவரை இடைக்கால தடை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications