Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது! "காதல் சின்னம்" தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டலையா.. பரிசீலிக்கும் தொல்லியல் துறை.. பின்னணி என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காதல் சின்னமான தாஜ் மஹாலை ஷாஜகான் கட்டவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக இந்தியத் தொல்லியல் துறை பரிசீலனை செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி ஐகோர்ட்டில் இந்து சேனா என்ற அமைப்பு ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் அவர்கள் தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்படவில்லை என்றும் இது தொடர்பான சரியான வரலாற்றை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

 Delhi High Court asks ASI on case claiming Taj Mahal was not built by Shah Jahan

இந்த மனுவை இந்து சேனா தலைவர் சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் தாஜ் மஹால் முதலில் ராஜா மான் சிங்கின் அரண்மனையாக இருந்ததாகவும், பின்னர் அதை முகலாய பேரரசர் ஷாஜகான் புதுப்பிக்க மட்டுமே செய்ததாகக் கூறப்பட்டிருந்தது.

தாஜ் மஹால்: தாஜ் மஹால் கட்டப்பட்டது தொடர்பான பொய்யான தகவல்களை வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து அகற்ற தொல்லியல் துறை, மத்திய அரசு, இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டது. இப்போது இருக்கும் தாஜ் மஹால் என்பது ஏற்கனவே இருந்த ராஜா மான் சிங்கின் மாளிகையின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் மட்டுமே என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த மனுவில் மேலும், "தாஜ் அருங்காட்சியகம் என்ற புத்தகத்தில் மும்தாஜின் உடல் ராஜா ஜெய் சிங்கிற்கு சொந்தமான இடத்தில் ஒரு தற்காலிக குவிமாட கட்டமைப்பின் கீழ் அடக்கம் செய்யப்பட்டது என்றே கூறப்பட்டுள்ளது. தாஜ் மஹாலைக் கட்ட ராஜா மான் சிங்கின் மாளிகை இடிக்கப்பட்டது என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் தாஜ் மஹால் குறித்து முரண்பட்ட தகவல்களையே கொடுத்துள்ளது.

முரணான தகவல்கள்: 1631இல் மும்தாஜ் இறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவரது உடல் தாஜ் மஹாலின் கல்லறையில் வைக்க ஆக்ராவுக்கு எடுத்துவரப்பட்டதாக இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே தொல்லியல் துறை இணையத்தில் தாஜ் மஹால் வளாகம் கட்டி முடிக்க 17 ஆண்டுகள் அதாவது 1648 வரை ஆனதாகக் கூறப்பட்டுள்ளது.

தாஜ் மாஹல் 17 ஆண்டுகள் கட்டுமானத்திற்குப் பிறகு 1648இல் கட்டி முடிக்கப்பட்ட சூழலில், 1631இல் அவரது உடல் எப்படி இங்கே எடுத்து வரப்பட்டிருக்க முடியும். இப்படி தொல்லியல் துறை இணையத்திலேயே முரனான தகவல்கள் இருக்கிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று விசாரணை: இந்து சேனா அமைப்பு இதற்கு முன்பு இதே வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. கடந்த 2022 டிசம்பரில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுபோல விசாரணையை எல்லாம் பொதுநல வழக்கு என்று தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இதையடுத்து வழக்கு வாபஸ் பெற்றார் சுர்ஜித் சிங் யாதவ். இது குறித்து இந்திய தொல்லியல் துறையிடம் முறையிட்டிருந்தார்.

இதற்கிடையே இப்போது மீண்டும் அவர்கள் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொட்ர்ந்துளஅளனர். இந்த மனு இன்று டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.. அப்போது உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே இது குறித்துத் தொடரப்பட்ட வழக்கை டெல்லி ஐகோர்ட் சுட்டிக் காட்டியது. அப்போது இந்து சேனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ஆண்டு ஜனவரி மாதமே இது குறித்து தொல்லியல் துறையிடம் முறையிட்டதாகவும் இருப்பினும் அவர்கள் பதில் தரவில்லை என்று கூறினார்.

பரிசீலனை: அப்போது மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பாக ஆராய்ந்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதையடுத்து தாஜ்மகால் கட்டுமானம் தொடர்பான விவகாரத்தை இனி தொல்லியல் துறை விசாரிக்கும் என்று கூறி டெல்லி ஐகோர்ட் வழக்கை முடித்து வைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+