விவகாரத்து செய்தாலும் ஜீவனாம்சம் வழங்க முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட நிதிமன்றம்! ‘ஒரே’ பாயிண்ட்!
டெல்லி: திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி பிரிந்தாலும், "நிதி ரீதியாகச் சுயசார்புடையவர்" என்றால் அவருக்கு நிரந்தர ஜீவனாம்சம் (maintenance) வழங்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நாடு முழுவதும் பேசப்படும் விதமாகியுள்ளது.
ஜீவனாம்சம் வழங்குவது குறித்து ஒரு குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் க்ஷேத்ரபால் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கில், கணவன் தரப்பில் "மனைவி உயர்ந்த பதவியில் அரசு அலுவலராக பணியாற்றி வருகிறார், அவருக்கு போதுமான வருமானம் உள்ளது. எனவே ஜீவனாம்சம் வழங்க வேண்டிய அவசியமில்லை" என்று வாதிடப்பட்டது.

டெல்லி உயர் நீதிமன்றம்
அதை பரிசீலித்த உயர் நீதிமன்றம், "நிரந்தர ஜீவனாம்சம் என்பது சமூக நீதியை உறுதி செய்யும் ஒரு நடவடிக்கை. ஆனால் அது திறமையான இரு நபர்களின் நிதி நிலையை சமநிலைப்படுத்துவதற்கோ அல்லது ஒருவரை செல்வச் செழிப்படையச் செய்வதற்கோ பயன்படுத்தப்பட முடியாது" என்று கூறியது. நீதிபதிகள் மேலும், "ஜீவனாம்சம் கோருபவர் உண்மையிலேயே நிதி உதவி தேவைப்படுவதை நிரூபிக்க வேண்டும். நிதி ரீதியாக சுயசார்பாகவும், உயர்ந்த வருமானத்துடன் இருப்பவர்களுக்கு ஜீவனாம்சம் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை" என்று தெளிவாகக் குறிப்பிட்டனர்.
மனைவி வருமானம்
இந்த வழக்கில், மனைவி இந்திய ரயில்வேயின் போக்குவரத்து பிரிவில் குரூப் 'ஏ' அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கணிசமான வருமானம் பெறும் நிலையில் இருப்பதால், அவரை "நிதிச் சுதந்திரம் பெற்றவர்" என நீதிமன்றம் வரையறுத்தது. அத்துடன், அவர் தனது கணவரை நோக்கி தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தியதும், அவரது தாயை இழிவாகப் பேசியதும், அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதும் நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
நிரந்தர ஜீவனாம்சம்
இதனை "மனரீதியான கொடுமை" எனக் குறிப்பிடும் வகையில் நீதிமன்றம், கணவருக்கு விவாகரத்து வழங்கியிருந்தது. மனைவி தரப்பில், "திருமணத்தை ரத்து செய்ய சம்மதிக்க ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இதனை நீதிமன்றம் கடுமையாகப் பதிவுசெய்து, "இது பாசத்தையோ உறவையோ காப்பாற்றும் நோக்கமல்ல; பொருளாதார ரீதியாகப் பலன் பெறும் நோக்கத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறது" எனக் கூறியது.
நீதிமன்ற தீர்ப்பு
இறுதியாக, உயர் நீதிமன்றம் "குறுகிய கால திருமண வாழ்க்கை, குழந்தைகள் இல்லாதது, மனுதாரரின் உயர்ந்த வருமான நிலை, நிதி தேவையை நிரூபிக்கும் ஆதாரம் இல்லாதது ஆகிய காரணங்களால் நிரந்தர ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை." எனக் கூறி, குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. சட்ட வல்லுநர்கள் கூறுவதாவது, "இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் பல குடும்ப வழக்குகளுக்கு முன்னுதாரணமாக அமையும். ஜீவனாம்சம் சமூக நலனுக்காக உருவாக்கப்பட்ட விதி; ஆனால் அதை தவறாகப் பயன்படுத்தி நிதி பலன் தேடுவது தவறு என்பதையே நீதிமன்றம் தெளிவாகச் சொல்கிறது" என்கிறார்கள்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications