ஜெயில் கதவுகள் திறக்குமா? கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு- ஹைகோர்ட் இன்று தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னரே ஜாமீன் மீதான தடையை நீட்டிக்கக் கோரும் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு மீது முடிவெடுக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

arvind kejriwal delhi

தமக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் ஒருவாரம் நீட்டிக்க வேண்டும் என்று நீதிமன்றப் படிகளேறிப் பார்த்தார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால் எந்த நீதிமன்றமும் கெஜ்ரிவாலுக்கு சாதகமான தீர்ப்பு தரவில்லை.இதனால் ஜூன் 2-ந் தேதி திஹார் சிறையில் சரணடைந்தார் கெஜ்ரிவால்.

இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவால் விசாரணை நீதிமன்றத்தில் முறைப்படி ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கடந்த 20-ந் தேதி கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுத்தது விசாரணை நீதிமன்றம். ஆனால் அமலாக்கத்துறையோ கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதனால் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலையாக முடியாத நிலைமை உருவானது.

இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீனை நிறுத்தி வைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் மிஸ்ரா, பட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவு முழு விவரம் கிடைத்த பின்னரே கெஜ்ரிவால் மனு மீது முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். மேலும் ஜூன் 26-ந் தேதி இந்த மனு மீது விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றமானது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை எதிர்க்கும் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீது இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பளிக்க இருக்கிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+