ஒரு சின்ன டாடூ.. வயர்லெஸ் செட்.. சௌமியா விஸ்வநாதனை கொன்றவர்களை சிக்க வைத்தது எப்படி?
டெல்லி: டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தொலைக்காட்சி செய்தியாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் நான்கு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காண மூன்று விஷயங்கள் போலீசாருக்கு மிகவும் உதவியாக இருந்தது அவற்றை இப்போது பார்ப்போம்.
கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி டெல்லியில் பிரபல ஆங்கில ஊடகத்தின் செய்தியாளர் சௌமியா விஸ்வநாதன்(25 வயது) ஒரு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். ஊடகத்தில் பணி முடிந்து அதிகாலை 3.30 மணிக்கு வீட்டுக்கு சென்ற சௌமியாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றார்கள். தெற்கு டெல்லியில் உள்ள கஞ்ச் பகுதியில் கொள்ளைக்காக நடந்த இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

துப்பு துலங்கியது: இந்த கொலையில் நீண்ட காலமாக குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். ஆனாலும் எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது. இதனிடையே 2009 ஆம் ஆண்டு மார்ச் 18ம் தேதி ஜெஹிஷா கோஷ் என்ற ஐடி பெண் ஊழியர் கொள்ளை அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவி கபூர், அமித் சுக்லா மற்றும் பல்ஜீத் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், செளமியா விஸ்வநாதன் கொலையில் தொடா்பு இருப்பதை ஒப்புக்கொண்டனர்.
குற்றவாளிகள்: சௌமியா விஸ்வநானிடம் கொள்ளையடிக்கும் நோக்கில் கொன்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ரவி கபூர், சுக்லா, மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் நான்கு பேர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது.
ஐந்து நிமிடத்தில் வருவேன்: இதனிடையே சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் கண்டது எப்படி என்பது குறித்து போலீசார் தகவல்களை வெளியிட்டுள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு மாதம் 18ம் தேதி ஜிகிஷா கோஷ் என்ற பெண் ஐடி ஊழியர் அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்ட ப்ராஜட்டுகளை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வந்து கொண்டிருந்தார். டெல்லி வசந்த் விகாரில் அவரது வீடு இருந்தது. இன்னும் ஐந்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று அவரது அம்மாவிடம் ஜிகிஷா ஜோஷ் கூறியிருக்கிறார்.ஆனால் சொன்னபடி வரவில்லை. என்னாச்சு தன் மகளுக்கு என்று பதறியபடி போலீசில் புகார் அளித்துள்ளார் அவரது அம்மா.
சிசிடிவி காட்சியால் கைது : போலீசார் ஐடி ஊழியர் ஜிகிஷாவை தேடி வந்த நிலையில் பரிதாபாத்தின் சுராஜ் குந்த் பகுதியில் 3 நாட்களுக்கு பிறகு உடலை கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி உதவியது. அந்த சிசிடிவி காட்சியில் குற்றாவளி ஒருவர் பச்சை குத்தி இருந்தது தெரியவந்தது. அதில் ஒரு குற்றவாளி போலீசாரின் வயர்லெஸ் செட்டை திருடி சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதை வைத்து தீவிரமாக குற்றவாளியை தேடிய டெல்லி போலீசார், கடத்தி கொன்று பணம் பறிக்கும் கும்பல் தான் இதனை செய்ததை கண்டுபிடித்தனர். இந்த வழக்கில் இந்த மாலிக் தான் போலீசாரிடம் இருந்து வயர்லெஸ் செட்டை பறித்து சென்றவர் என்பதால் அவரை உடனே அடையாளம் கண்ட போலிசார் அடுத்தடுத்து ரவி கபூர், மற்றும் சுக்லா, அஜய் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இன்னொரு கொலையில் தொடர்பு: குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஜிகிஷா ஜோஷின் டெபிட் கார்டை பயன்படுத்தி பொருட்களும் வாங்கி இருந்தனர். இதெல்லாம் குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உதவியாக இருந்தது. குற்றவாளிகளை பிடித்து விசாரித்த போது. நெல்சன் மண்டேலா மார்க்கில் இதேபோல் இன்னொரு பெண்ணையும் கொன்று கொள்ளையடித்தோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். அதுதான் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து டெல்லி தெற்கு டிஎஸ்பி ஹெஜிஎஸ் திலிவால் தலைமையில் தனிப்படை இந்த இரு கொலை குறித்து விசாரித்தனர்.
மதுபோதை: மேலும் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் தடயவியல் ஆதாரங்களையும் சேகரிக்க போலீசார் முடிவு செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது, சௌமியா விஸ்வநாதனை கொன்ற அன்று என்ன நடந்தது என்பதை தெரிவித்தனர். அப்போது குற்றவாளி ரவி கபூர் மாருதி வேகன் ஆர் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்திருக்கிறார். சுக்லா அவருக்கு அருகில் அமர்ந்திருக்கிறார். மாலிக் மற்றும் அஜய் குமார் ஆகியோர் பின் இருக்கையில் அமர்ந்திருந்திருக்கிறார்கள். நான்கு பேருமே குடிபோதையில் இருந்துள்ளனர்.

முந்தி சென்ற சௌமியா: அப்போது மாருதி ஜென் காரில் சௌமியா விஸ்வநாதன் வசந்த் குஞ்சில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். இதனிடையே அதிகாலை வேளையில் ஒரு பெண் (சௌமியா) காரை வேகமாக ஒட்டியபடி அவர்களை முந்திச் செல்வதையும், அவர் தனியாக இருப்பதையும் நான்கு பேரும் பார்த்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்து வேகமாக காரை ஓட்டி சென்றுள்ளனர். சௌமியாவின் வாகனத்திற்கு அருகில் வந்தனர்.
துப்பாக்கிச்சூடு: முதலில், சௌமியாவை அவர்கள் வழிமறிக்க முயன்றனர், ஆனால் சௌமியா காரை நிறுத்தவில்லை. இதையடுத்து குற்றவாளி கபூர் விஸ்வநாதனின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் தோட்டா பாய்ந்து சம்பவ இடத்திலேயே சௌமியா விஸ்வநாதன் உயிரிழந்தார். பின்னர் அவரது கார் டிவைடரில் மோதி நின்றது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர், ஆனால் 20 நிமிடங்களுக்குப் பிறகு என்ன நடந்தது என்று பார்க்க வந்திருக்கிறார்கள்.ஆனால் காவல்துறையினரைக் கண்டதும், அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாக்குமூலத்தால் இப்போது நான்கு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications