சத்தமின்றி கைமாறிய ரூ. 292 கோடி.. "ஆம் ஆத்மி+ பிஆர்எஸ்.." மிக பெரிய சிக்கலில் கெஜ்ரிவால்? பகீர்
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை விவகாரம் ஆம் ஆத்மிக்கு தலைவலியாக மாறியிருக்கும் நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
டெல்லியில் கடந்த 2021இல் புதிய மதுபான கொள்கை அமலுக்கு வந்தது. இந்த கொள்கை டெல்லியில் தனியார் மது விற்பனை அனுமதித்தது. இருப்பினும், இந்த கொள்கையை வகுப்பதில் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது.

அமலாக்க துறை: இதையடுத்து அமலாக்கத் துறை இந்த வழக்கை விசாரணை செய்தது. இதில் ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, பிஆர்எஸ் கட்சியின் கவிதா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மிக்கு மிக பெரிய தலைவலியாக மாறியுள்ள இந்த டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிக்கை குறித்த தகவல்களைப் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
அதில் டெல்லியில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்த பிஆர்எஸ் தலைவர் கேசிஆரின் மகள் கே.கவிதா, 'சவுத் குரூப்' என்ற மதுபான ஆலைகள் நடத்தும் க்ரூப் உடன் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் ரூ. 292.8 கோடி அளவுக்கு ஆம் ஆத்மிக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ. 292 கோடி: இந்த ரூ. 292 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதில் கவிதாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும், "இந்தோ ஸ்பிரிட்ஸ் என்ற பெயரில் போலியான நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் ரூ. 292.8 கோடியை கவிதா இதற்குப் பயன்படுத்தி உள்ளார். குற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை முறையான வணிகத்தின் மூலம் கிடைத்த பணமாக அவர் காட்டியுள்ளார்.
மேலும், விசாரணையின் போது, கவிதா ஒத்துழைக்கவில்லை என்றும் மொபைலில் இருந்த டேட்டாவை ஏன் டெலிட் செய்தார் என்ற விளக்கத்தைத் தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சாட்சிகளைக் கலைக்கும் முயற்சியுில் அவர் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மொபைல்கள்: இந்த விகாரத்தில் தனக்கு இருக்கும் தொடர்பை மறைக்க அவர் ஆதாரங்களை அழித்துள்ளார். மேலும், மொபைல் போனை மொத்தமாக டெலிட் செய்துள்ளார். கவிதா மொத்தம் ஒன்பது ஃபோன்களை அமலாக்கத் துறையிடம் சமர்ப்பித்ததாகவும் இருப்பினும் அவை அனைத்தில் இருந்தும் டேட்டாக்கள் முழுமையாக நீக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், விசாரணையின் போது, கவிதா ஒத்துழைக்கவில்லை என்றும் மொபைலில் இருந்த டேட்டாவை ஏன் டெலிட் செய்தார் என்ற விளக்கத்தைத் தரவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சாட்சிகளைக் கலைக்கும் முயற்சியும் அவர் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பிஆர்எஸ்: தெலுங்கானாவின் முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சி தலைவருமான கேசிஆரின் மகளான கவிதா கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது முதலே அவர் சிறையில் தான் இருந்து வருகிறார். முதலில் இந்த டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கத் துறை தான் கவிதாவை கைது செய்தது. பிறகு திகார் சிபிஐயும் அவரை கைது செய்தது. அவருக்கு வரும் ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதே விவகாரத்தில் தான் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்யக் கடந்த மாதம் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். ஜாமீன் முடிந்த நிலையில், அவர் தானாக நேற்று திகார் சிறையில் சரணடைந்தார். இந்தச் சூழலில் குற்றப்பத்திரிக்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications