டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு: மேலும் 30 இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை
டெல்லி: டெல்லியில் ஆளும் ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் மேலும் 30 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையால் தனியார் ஆதாயம் பெற்றனர்; இதில் பெருமளவு ஊழல் முறைகேடு நடந்துள்ளது என்பது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகள். இது தொடர்பாக ஏற்கனவே ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா (மணீஷ் சிசோடியா) சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

ரெய்டில் மணிஷ் சிசோடியா
அத்துடன் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டன. இந்த சோதனைகள், விசாரணைகள் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையாகவும் வெடித்தன. டெல்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்கும் சதியுடனேயே இந்த சோதனைகள் நடத்தப்பட்டன; மணிஷ் சிசோடியாவுக்கு நெருக்கடி கொடுத்து பாஜகவுக்கு தாவ வைக்கும் பேரம்தான் இந்த ரெய்டு எனவும் கூறப்பட்டது. இதனை பாஜக கடுமையாக நிராகரித்திருந்தது.

சிபிஐ அதிகாரி தற்கொலை
இந்நிலையில் மணிஷ் சிசோடியா மீதான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கருத்து தெரிவித்த மணிஷ் சிசோடியா, தம் மீதான பொய் வழக்கை நடத்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாலேயே அந்த அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

மீண்டும் ரெய்டு
இந்த பரபரப்புகளுக்கு நடுவே இன்றும் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாகஅமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, குருகிராம், உ.பி. லக்னோ, தெலுங்கானா ஹைதராபாத், கர்நாடகா பெங்களூர் நகரங்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 30 இடங்களில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மணிஷ் சிசோடியா தவிர..
ஆனால் டெல்லியில் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் இம்முறை சோதனை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தபட்டது. வங்கி லாக்கரிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த சோதனைகளில் எதுவும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications