வசமாய் சிக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லி மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை சம்மன்.. பரபர தகவல்
டெல்லி: புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி அமலாக்கத்துறை சார்பில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை வகுக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டது. அப்போது பல கோடி ரூபாய் கணக்கில் வராமல் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்திருப்பது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை விசாரணைக்குள் நுழைந்தது. அமலாக்கத்துறை சார்பில் டெல்லி துணை முதல்வராகவும், கலால் துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு அவரை கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறை அவரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது.
அதேபோல் ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சர் சிங் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர்கள் 2 பேரும் புழல் சிறையில் உள்ளனர். மணிஷ் சிசோடியா கடந்த 8 மாதங்களாக சிறையில் உள்ளார். அவர் பலமுறை ஜாமீன் கேட்டாலும் கூட அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இன்று கூட உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தான் தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் மாதம் 2ம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரும் கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் ஆம்ஆத்மி கட்சியினர் கடும் கோபமடைந்துள்ளனர். ஆம்ஆத்மி கட்சியின் செயல்பாட்டை பார்த்து பாஜக பயப்படுகிறது. இதனால் தான் டெல்லி மதுபான ஊழல் தொடர்பான வழக்கில் ஒவ்வொரு தலைவர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டை சுமர்த்தி மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கைது செய்து வருவதாக ஆம்ஆத்மி விமர்சனம் செய்து வருகிறது.
இருப்பினும் இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராவது என்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்பாக சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 8 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications