மகளை பற்றி தவறாக பேசியதால் ஆத்திரம்.. பக்கத்து வீட்டுக்காரரை படுகொலை செய்த டெல்லிக்காரர்
டெல்லி: தனது மகளை பற்றி தவறாக பேசிய பக்கத்து வீட்டுக்காரரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய அண்டை வீட்டுக்காரரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள பால்பரிதால்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணா மற்றும் ராகேஷ். இவர்கள் இருவரும் ஒரே தெருவில் வசிக்கும் அண்டை வீட்டுக்காரர்கள்.

இந்நிலையில் கிருஷ்ணா மற்றும் ராகேஷ் இடையே நேற்று திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் சரமாரியாக திட்டிக்கொண்டு இருந்துள்ளனர். இருவருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் நீடித்தது. அப்போது, ராகேஷ், கிருஷ்ணாவின் 3வயது மகளின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். இதன் பின்னர் கைகலப்பாக இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறி உள்ளது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் விலக்கி விட்டு சமாதானம் செய்ய முயன்றனர். அதன் பிறகு ராகேஷ் அவரது மனைவி பூஜா மற்றும் அவரது சகோதரர் முகேஷ் ஆகியோர் கிருஷ்ணாவின் வீட்டில் இருந்து வெளியே வர முயன்றுள்ளனர்.
அப்போது திடீரென கிருஷ்ணா மற்றும் அவரது சகோதரர் ரஞ்சித் ஆகியோர் ராகேஷை கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராகேஷை அவரது மனைவி பூஜா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொடுண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராகேஷ் உயிரிழந்தார்.
இது தொடர்பாக ராகேஷின் மனைவி பூஜா அளித்த புகாரை ஏற்று கிருஷ்ணா மற்றும் அவரது சகோதரர் ரஞ்சித்தை தென்கிழக்கு டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications