வாயை திறக்க முடியல.. காதலுனுக்கு மெசேஜ்! கணவரை கொலை செய்து நாடகம்! இன்ஸ்டாவால் சிக்கிய இளம்பெண்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியின் உத்தம் நகரில், கணவரை கொலை செய்துவிட்டு அந்தக் கொலையை மறைக்க தனது உறவினருடன் இணைந்து இளம்பெண் செய்த தில்லாலங்கடி வேலைகள் அம்பலமானது. தலைநகர் டெல்லியை உலுக்கிய இந்த கொலை சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

டெல்லியை சேர்ந்தவர் கரன் தேவ் (வயது 36), மேற்கு பகுதியில் உள்ள ஜான்கபுரி பகுதியில் தனது மனைவியுடன் கரன்தேவ் வசித்து வந்தார். கடந்த 13 ஆம் தேதி கரண் தேவின் மனைவி, அவரது பெற்றோருக்கு திடீரென போன் செய்துள்ளார். அதில், கரண் தேவ் மின்சாரம் ஷாக் அடித்ததால் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக கூறினார்.

delhi-man-killed-by-wife-and-her-lover-also-her-brother-in-law

ஷாக் அடித்து இறந்ததாக

இதையடுத்து பதறியடித்து வந்த கரன் தேவின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உடலை கேட்டுள்ளனர். ஆனால், சந்தேகம் எதுவும் இல்லை பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர் கரன் தேவின் பெற்றோர்கள்.

பல திடுக்கிடும் தகவல்

ஆனால், போலீசார் வற்புறுத்திய பிறகு பிரதேச பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டனர். பிரேத பரிசோதனைகு உடல் அனுப்பப்பட்ட நிலையில், கரன் தேவ் மனைவிக்கும், கரன் உறவினருக்கும் இடையேயான இன்ஸ்டாகிரம் உரையாடல் வெளியாகியது. இதில் இடம் பெற்று இருந்த உரையாடல் மூலம் கரன் தேவின் மனைவி சுஷ்மிதா மற்றும் ராகுல் (கரனின் தந்தை வழி உறவினர்) க்கும் இடையே தகாத உறவு இருந்தது.

இவர்கள் இருவரும் சேர்ந்த்தே கரண் தேவை கொலை செய்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த இண்ஸ்டகிராம் உரையாடலை எடுத்த கரண் தேவின் சகோதரர் குணால், போலீசாரிடம் அதை சமர்பித்தார். அதில் பல திடுக்கிடும் தகவல் இடம் பெற்று இருந்தது. அதாவது, கரணை கொலை செய்வதற்காக ராகுல் கொடுத்த ஐடியாவின் படி 15 தூக்க மாத்திரைகளை சாப்பாட்டில் கலந்து கொடுத்து இருக்கிறார் சுஷ்மிதா.

எல்லா மருந்தையும் கொடுத்துவிடு

ஆனால், தூக்க மாத்திரை சாப்பிட்டும் உடனடியாக மாத்திரை வேலை செய்யவில்லை. இதனால், கோபம் அடைந்த சுஷ்மிதா, ராகுலுக்கு மெசேஜ் அனுபியுள்ளார். அந்த மெசேஜில், மருந்து சாப்பிட்டு எவ்வளவு நேரம் கழித்து உயிர்போகும். மூன்று மணி நேரம் ஆகியும், இன்னும் சாகவில்லை. என்ன செய்வது, ஏதாவது ஐடியா கொடு என்று கேட்டு இருக்கிறார். இதற்கு பதிலளித்த ராகுல், எதுவுமே இல்லையன்றால், அவருக்கு ஷாக் கொடுத்து விடு என்று சொல்கிறார்.

அப்போது எப்படி ஷாக் கொடுப்பது, என்று கேட்க, டேப் மூலமாக கட்டி அவருக்கு கரண்ட் ஷாக் கொடுக்கலாம் என்று சொல்கிறார். அப்போது சுஷ்மிதா, அவர் மெதுவாக மூச்சு விடுகிறார் என்று சொல்லவே, உன்னிடம் உள்ள எல்லா மருந்தையும் அவருக்கு கொடுத்துவிடு என்று சொல்கிறார். இதற்கு பதிலளித்த சுஷ்மிதா, "கரனின் வாயை திறக்க முடியவில்லை. தண்ணீரை வேண்டும் என்றால் ஊற்றலாம்.

இருவரும் சேர்ந்து கொலை செய்யலாம்

ஆனால் மருந்து கொடுக்க முடியாது. நீ இங்கே வா, இருவரும் சேர்ந்து கொலை செய்யலாம்" என்று இந்த உரையாடல் தொடர்கிறது. கரன் மரணத்தை மின்சாரம் ஷாக் அடித்த விபத்து போல சித்தரிக்க இருவரும் முயன்றதாகவும் ஆனால், இன்ஸ்டகிராம் உரையாடலை வைத்து இருவரையும் கையும் களவுமாக கைது செய்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும், போலீசார் தெரிவித்தனர். தனது கணவர் கரன் தன்னை அடித்ததாகவும், பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் சுஷ்மிதா போலீசாரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+