டெல்லியில் பாஜகவுக்கு அடி.. உள்ளாட்சி தேர்தலில் திடீர் சரிவு! காங்கிரஸுக்கு எதிர்பார்க்காத வெற்றி
டெல்லி: இந்தாண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆதிக்கத்தைத் தும்சம் செய்துவிட்டு பாஜக மிக பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இதற்கிடையே அங்கு உள்ளாட்சி வார்டுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் பலம் சற்றே சரிந்துள்ளது.
இத்தனை காலமாக டெல்லி ஆம் ஆத்மியின் கோட்டையாக இருந்தது. ஆனால், இந்தாண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மியை பாஜக துடைத்து எடுத்துவிட்டது என்றே சொல்லலாம். டெல்லியில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று பாஜக ஆட்சியை அமைத்தது. இதற்கிடையே அங்குக் காலியாக இருந்த சில வார்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.

டெல்லி இடைத்தேர்தல்
மொத்தம் 12 வார்டுகளில் உள்ளாட்சி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தப்பட்டது. டெல்லி சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு தேர்வான டெல்லி வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் இந்த இடைத்தேர்தல் நடந்தது. இந்த 12 இடங்களில் 9 இடங்கள் பாஜக வசமும், மீதமுள்ள 3 இடங்கள் ஆம் ஆத்மி வசமும் முன்பு இருந்தது.
பாஜக
கடந்த நவம்பர் 30ம் தேதி இதற்கான இடைத்தேர்தல் நடந்த நிலையில், இன்று அதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இடைத்தேர்தல் நடந்த 12 வார்டுகளில், பாஜக 7 இடங்களில் வென்றது. மற்ற கட்சிகளை விட பாஜக அதிக இடங்களை வென்றது என்ற போதிலும், இதற்கு முன்பு தன்வசம் இருந்த இடங்களில் இரு இடங்களை பாஜக சரிந்தது. இதன் மூலம் உள்ளாட்சியில் பாஜகவின் பலமும் சரிந்துள்ளது. வினோத் நகர், துவாரகா, சாந்தினி சௌக், அசோக் விஹார், கிரேட்டர் கைலாஷ், ஷாலிமார் பாக், திச்சாவ் கலான் ஆகிய வார்டுகளில் வெற்றியைப் பதிவு செய்தது.
ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி இதற்கு முன்பு 3 வார்டுகளை வைத்திருந்த நிலையில், அதைத் தக்கவைத்துக் கொண்டது. ஆம் ஆத்மி கட்சி நாரைனா, தக்ஷின்புரி, முண்ட்கா வார்டுகளைக் கைப்பற்றியது. சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவை வீழ்த்தும் என ஆம் ஆத்மி எதிர்பார்த்த போதிலும், அது பெரிய வெற்றியைப் பெறவில்லை.
காங்கிரஸ்
இதில் எதிர்பாராத சர்ப்பைரஸ் என்னவோ காங்கிரஸ் கட்சிக்குத் தான். காங்கிரஸ் கட்சி சார்பில் சுரேஷ் சௌத்ரி சங்கம் விஹாரில் வெற்றி பெற்றார். அவர் பாஜக வேட்பாளரை விட 12,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இது காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய வெற்றி இல்லை என்றாலும் குறிப்பிடத்தக்க வெற்றி என்றே சொல்லலாம்.
ஏனென்றால் காங்கிரஸ் கடைசியாக 2013ல் தான் அங்குச் சட்டசபைத் தேர்தலில் 8 இடங்களில் வென்றிருந்தது. அதன் பிறகு 3 தேர்தல்களில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அப்படியிருக்கும்போது இந்த வெற்றியின் மூலம் காங்கிரஸ் டெல்லியில் மீண்டும் தனது கணக்கை ஓபன் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சுரேஷ் சௌத்ரி, சங்கம் விஹாரில் வெற்றி பெற்றார். இது தவிர அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியும் ஒரு இடத்தில் வென்றது. சாந்தினி மஹால் வார்டை அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பெற்றது.
டெல்லி
மொத்தம் 12 வார்டுகளில் 26 பெண்கள் உட்பட 51 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த நவம்பர் 30ம் தேதி 580 வாக்குச்சாவடிகளில் வாக்கெடுப்பு அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற்றது. சாந்தினி மஹாலில் அதிகபட்சமாக 55.93% வாக்குப்பதிவு பதிவானது. ஒட்டுமொத்தமாக 38.51% வாக்குகள் பதிவாகின.. இது 2022 மாநகராட்சி தேர்தலில் பதிவான 50.47%ஐ விடக் குறைவாகும்
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications