கொரோனாவுக்கான ஐசியூ வார்டுகளில் வெறும் 27 படுக்கைகளே காலி.. டெல்லி நகர மருத்துவமனைகள் தகவல்
டெல்லி: டெல்லி நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகளில் வெறும் 27 படுக்கைகள் மட்டுமே மீதம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஹரித்வார் கும்பமேளாவில் கலந்து கொண்ட பெரும்பாலான டெல்லிவாசிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கும்பமேளாவுக்கு சென்றவர்கள் அரசால் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

டெல்லியில் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோசமான உடல்நிலையில் வரும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளின் ஐசியூ வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லி நகரில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை வைத்து சிகிச்சை அளிக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் வெறும் 27 படுக்கைகளே உள்ளது. இதனால் மாற்று இடங்களில் கொரோனா மையங்களை அமைக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
காவலர்களின் குடும்பத்தினருக்காக ஷாதரா, ரோஹினி, துவாரகா ஆகிய இடங்களில் 3 கொரோனா மையங்களை அமைக்க டெல்லி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications