நடிகர் தீப் சித்து குறித்து தகவல் கொடுங்க...ரூ.1 லட்சத்தை வாங்கிக்குங்க...டெல்லி போலீசார் அறிவிப்பு!
டெல்லி: டெல்லி குடியரசு தின வன்முறையில் தொடர்புடைய நடிகர் தீப் சித்து குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
மேலும், குற்றவாளிகளான ஜக்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகியோர் குறித்தும் தகவல் தெரிவிப்பவர்களுக்கும் பரிசுத்தொகை ரூ.50,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
குடியரசு தின போராட்ட வன்முறையில் ஈடுபட்ட 12 பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பதற்றம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சமூக விரோதிகள் புகுந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியே பரபரப்பானது.

தீப் சித்து மீது குற்றச்சாட்டு
பஞ்சாபி நடிகரும், பாடகருமான தீப் சித்துதான் இளைஞர்களை செங்கோட்டைக்கு அணிவகுத்து சென்று சீக்கிய மதக் கொடியை ஏற்றிவைக்க இளைஞர்களை தூண்டியதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டின. தீப் சித்து போராட்டத்தை திசை திருப்பி காலிஸ்தானி இயக்கத்தை ஆதரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

தீப் சித்து மாயம்
குடியரசு தின சம்பவத்தில் தொடர்புடை நபர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். வன்முறை சம்பவம் நடந்தபோது பதிவான வீடியோ காட்சிகள் அடிப்படையில் போலீசார் அவர்களை பிடித்து வருகின்றனர். டெல்லி போராட்டம் தொடர்பாக ஏரளாமான பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.இதற்கிடையே விவசாயிகள் குற்றம்சாட்டிய பஞ்சாபி நடிகர் தீப் சித்து 26-ம் தேதியில் இருந்து மாயமாகி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் நடிகர் தீப் சித்து குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று டெல்லி போலீசார் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு
இது தொடர்பாக டெல்லி போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:- குடியரசு தினம் அன்று டெல்லி பேரணியை திசை மாற்றிய குற்றம் சாட்டப்பட்டுள்ள பஞ்சாபி நடிகர் தீப் சித்து மற்றும் மற்ற 3 பேர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். மேலும், குற்றவாளிகளான ஜக்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகியோர் குறித்தும் தகவல் தெரிவிப்பவர்களுக்கும் பரிசுத்தொகை ரூ.50,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குடியரசு தின போராட்ட வன்முறையில் ஈடுபட்ட 12 பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications