வேறு பெண்ணுடன் நிச்சயம்! ஆபாச படங்களை காட்டி மிரட்டிய காதலன்! ஆசிட் பாட்டில் கொடுத்தனுப்பிய காதலி
டெல்லி: தன்னை காதலித்து தனிமையில் இருந்துவிட்டு வேறொரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த காதலி, தனது காதலனின் முகத்தை சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி புறநகர் பகுதியான நிகல் விகாரை சேர்ந்தவர் ஓம்கார் (24). இவர் கணினியில் வரைகலை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். அவர் சம்பவத்தினத்தன்று ரங்கோலா பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை தாக்கினர்.

கத்தியால் முகத்திலும் பல இடங்களிலும் கிழித்து காயம் ஏற்பட்டது. இதனால் அவருடைய முகம் சிதைந்து போனது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தாக்கிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் துவாரகா மோர் பகுதியில் சுற்றிய விகாஷ் என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரும் அவருடைய இரு நண்பர்களும் சேர்ந்து ஓம்கார் என்ற இளைஞரை தாக்கியதை ஒப்புக் கொண்டனர். எதற்காக அப்படி செய்தீர்கள் என போலீஸார் கேட்டனர்.
அதற்கு அவர், ஒரு பெண் சொல்லித்தான் இப்படி செய்தோம் என கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் குறித்து விசாரிக்க போகும் போதுதான் போலீஸாருக்கு ஓம்காரின் காதல் கதை வெளிச்சத்திற்கு வந்தது. ஓம்காருக்கு தன்னுடன் பணி செய்த 30 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
அந்த பெண் ஓம்காரை விட வயதில் மூத்தவர். எனினும் அந்த பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து நெருக்கமாகவும் பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ஓம்காருக்கு வேறு ஒரு பெண்ணுடன் அண்மையில் நிச்சயதார்த்தம் ஏற்பாடானது. இதை அறிந்த அந்த காதலி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
என்னுடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் , நான் என்ன செய்வது என கேட்டுள்ளார். ஆனாலும் அந்த நபர், அந்த பெண்ணின் கூக்குரலை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. இதனால் காதலி மனமுடைந்தார்.
தன்னை ஏமாற்றிய காதலனை பழித்தீர்க்க திட்டமிட்டார். இதற்காக 3 குண்டர்களை கூலிக்கு அமர்த்திய அவர் அவர்களுக்கு ரூ 30 ஆயிரம் பணம் கொடுத்து காதலனின் முகத்தை சிதைக்குமாறு தெரிவித்திருந்தார். இதற்காக ஆசிட் பாட்டிலையும் அவர்களிடம் கொடுத்தாராம். ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி ஓம்கார் முகத்தில் ஆசிட்டை வீச முடியாததால் அவருடைய முகத்தில் தாக்கி முகத்தை கிழித்துள்ளனர்.
இதையடுத்து அந்த இளைஞர் கொடுத்த தகவலின்படி இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் "நான் திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தச் சொன்ன போது அந்தரங்க படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என சொன்ன காதலனை பழித் தீர்த்தேன்" என்றார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 இளைஞர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications