கொடூரம்.. நாயை ஹைட்ரஜன் பலூனில் கட்டி.. பறக்கவிட்ட இளைஞர்.. வைரல் வீடியோவால் தட்டி தூக்கிய போலீஸ்
டெல்லி: டெல்லியில் இளைஞர் ஒருவர் நாய் குட்டியை ஹைட்ரஜன் பலூனில் கட்டி பறக்கவிட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எப்படியாவது பிரபலம் அடைய வேண்டும், வைரலாக வேண்டும் என்பதற்காக பலர் வித விதமான வீடியோக்களை பதிவு செய்கிறார்கள். சிலரோ உடனே வைரல் ஆக வேண்டும் என்று வரம்பு மீறி பாலியல் ரீதியாகவோ, விலங்குகளை துன்புறுத்தியோ வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த கவுரவ் என்ற இளைஞர் வெளியிட்டு வீடியோ ஒன்று இணையத்தையே பரபரப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.

எப்படி
பல்வேறு ஹைட்ரஜன் பலூன்களை ஒன்றாக குட்டி நாயின் உடலில் கட்டி அதை ஓடவிட்டு, அதன் மூலம் பறக்க வைப்பது. கார் மீது நின்று கொண்டு தூக்கி எறிவது என்று வித விதமாக அந்த நாயை பறக்க வைத்தார். அந்த நாயும் எடை குறைவாக இருந்ததால் ஹைட்ரஜன் பலூன் காரணமாக 2 மாடிகள் உயரம் வரை பறந்து பின் கீழே வந்தது.

வைரல்
இந்த வீடியோ இணையம் முழுக்க வைரல் ஆன நிலையில், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த வீடியோவில் அந்த நாயின் கண்களில் பெரும் பதற்றம் தெரிந்தது. அதிலும் அந்த நாயை பறக்க வைக்க கவுரவ் வித்தியாச வித்தியாச முயற்சிகளை செய்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.

தவறு
இந்த வீடியோ இணையம் முழுக்க வைரல் ஆன நிலையில், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த வீடியோவில் அந்த நாயின் கண்களில் பெரும் பதற்றம் தெரிந்தது. அதிலும் அந்த நாயை பறக்க வைக்க கவுரவ் வித்தியாச முயற்சிகளை செய்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.

கைது
ஆனால் இவருக்கு எதிராக பல்வேறு விலங்குகள் நல அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து டெல்லி மால்வியா நகர் போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து போலீஸ் புகாரை தொடர்ந்து கவுரவ் கைது செய்யப்பட்டார். அவரின் அம்மாவும் இந்த வீடியோவில் இருந்ததால் அவர் மீதும் தனியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications