Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நியூஸ் க்ளிக் செய்தி இணையதள நிறுவனர் பிர்புர் புர்கயஸ்தா ஊபா சட்டத்தின் கீழ் கைது- ஆபீசுக்கு சீல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நியூஸ் க்ளிக் (நியூஸ் கிளிக்) செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிர்புர் புர்க்யஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் ஊபா (UAPA) எனும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 3 ஆண்டுகளில் ரூ38.05 கோடி பணத்தை நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் நிறுவனம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிடவே வெளிநாடுகளில் இருந்து இந்நிறுவனம் பணம் பெற்றது என்பதும் புகார். அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கின் அடிப்படையில் டெல்லியில் இன்று போலீசார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

 Delhi Police arrests NewsClick founder Prabir Purkayastha under UAPA case

நியூஸ் கிளிக் இணையதளத்தின் செய்தியாளர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டில் தங்கி இருந்த செய்தியாளர் ஒருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் இருந்த செல்போன், லேப்டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யபட்டன.

இதனையடுத்து டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் செய்தி இணையதள அலுவலகத்துக்கு டெல்லி போலீசார் சீல் வைத்தனர். பின்னர் நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் நிறுவனர் பிர்புர் புர்க்யஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் ஊபா சட்டத்தின் கீழ் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அண்மையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கியது. வெளிநாட்டில் இருந்து ஆதரவைப் பெற்று இந்த பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது என குற்றம்சாட்டி இருந்தார். அத்துடன் அமெரிக்காவை சேர்ந்த நெவில்ராய் சிங்காம், நியூஸ் க்ளிக் இணையதளத்துக்கு நிதி உதவி செய்வதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பகிரங்கமாக கூறியிருந்தார்.

நியூஸ் கிளிக் செய்தி இணையதள நிறுவனத்துக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு "இந்தியா" கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய பத்திரிகையாளர் சங்கமும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+