டெல்லி கலவரம்.. கான்ஸ்டபிள் ரத்தன் லால் கொலை.. குற்றப்பத்திரிக்கையில் யோகேந்திர யாதவ் பெயர்
டெல்லி: இந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தின்போது தலைமை கான்ஸ்டபிள் ரத்தன் லால் கொலை செய்யப்பட்ட வழக்கில், டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி மாத தொடக்கத்தில, வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்திற்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்தது.

சிஏஏ ஆதரவு மற்றும எதிர்ப்பு குழுக்கள் இடையே வெடித்த வன்முறையில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார். பல 100 பேர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கானோரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பலர் வாழ்வாதாரத்தை இழந்து நடு வீதிக்கு தள்ளப்பபட்டனர்.
தேசிய தலைநகரில் நடந்த கொடூர கலவரத்தின் போது கோகல்பூரியில் கலவரக்கார்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் டெல்லி காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் ரத்தன் லால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஸ்வராஜ் இந்தியாத் தலைவர் யோகேந்திர யாதவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
யோகேந்திர யாதவின் பெயர் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவர் ஒரு குற்றவாளியாக அதில் சேர்க்கப்படவில்லை.. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. எனினும் யோகேந்திர யாதவ் போராட்டம் நடந்த இடத்திற்கு சென்று கலவரக்காரர்களுடன் பேசியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications