தீவிரமாகும் போராட்டம்! டெல்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஆனாலும் மாஸ் காட்டிய மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் மாணவர் போராட்டத்திற்கு ஏராளமான இளைஞர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பார்கள் என மத்திய அரசுக்கு அச்சம் எழுந்திருக்கிறது. இதையடுத்து 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கண்ணாடியை திருப்பினா.. எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்? என்கிற கணக்காக இளைஞர்கள் மெட்ரோ ரயில் நிலையம் மூடல் குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டாலும் கூட, தங்கள் வருகையை தடுக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Delhi Police Metro train NEET

மாணவர்கள் போராட்டம்

நீட் பேப்பர் லீக், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து கடந்த ஒரு மாதமாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கரப்பான் ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் கடந்த 20ம் தேதி புதிய வடிவத்தை எட்டியது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர்.

தீவிரமடையும் போராட்டம்

அவர்களை தடுத்த போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்துள்ளனர். அதேபோல பெல்லட் குண்டுகளும், மின் அதிர்வு தடியும் பயன்படுத்தப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க, போராட்டம் இன்னும் தீவிரமடைய தொடங்கியது.

மத்திய அரசின் சாமாதான முயற்சி

எப்படியாவது போராட்டத்தை தடுக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு சமாதான முயற்சியில் இறங்கியிருக்கிறது. இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலம்தான் முக்கியம், நீட் வினாத்தாள் கசிவு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான். எனவே இது குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும். வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி சமாதானம் கூறியிருக்கிறார்.

ராஜினாமா கோரும் மாணவர்கள்

ஆனாலும் மாணவர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார்கள். வினாத்தாள் கசிவு ஏதோ நேற்று, இன்று நடக்கும் விஷயம் கிடையாது. 152 முறை வினாத்தாள் லீக் ஆகியிருக்கிறது. அப்போதெல்லாம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி.. இதற்கு தீர்வு தர்மேந்திர பிரதானின் ராஜினாமாதான். அதை செய்துவிட்டு அப்புறம் பேசுங்கள்.. என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

இந்நிலையில், இன்று விடுமுறை என்பதால் மாணவர்கள் போராட்டத்தில் மேலும் பலர் பங்கெடுக்கலாம் என்று மத்திய அரசு அச்சமடைந்திருக்கிறது. எனவே முன்கூட்டியே, 18 மெட்ரோ ரயில் நிலையங்களை மூட மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனாலும், ஆட்டோக்கள், பைக் டாக்ஸிகள் மூலம் இளைஞர்கள் போராட்ட களத்தில் குவிந்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+