ஷாக்கிங்.. ஒரே நாளில் இத்தனை கிலோவா.. மூட்டை மூட்டையாக பிடிபட்ட ஹெராயின்.. அதிர்ச்சி செய்தி!
மும்பையில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 330 கிலோ ஹெராயின் டெல்லி சிறப்பு போலீஸ் படையால் கைப்பற்றப்பட்டு உள்ளது.
மும்பை: மும்பையில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 330 கிலோ ஹெராயின் டெல்லி சிறப்பு போலீஸ் படையால் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதற்கு முன் ஒரே நாளில் இவ்வளவு போதை பொருளை கைப்பற்றியது இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் போதை பொருட்கள் இந்தியாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக மும்பையில் உள்ள துறைமுகத்திற்கு திருட்டுத்தனமாக அதிக அளவில் போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
இது கடந்த மூன்று மாதங்களில் அதிகம் ஆனதாக புகார்கள் எழுந்தது. முக்கியமாக ஹெராயின், அபீன், கொக்கெய்ன் அதிக அளவில் கடத்தப்பட்டு வந்துள்ளது.

ஸ்பெஷல் டீம்
இந்த கடத்தல்காரர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறியதை அடுத்து டெல்லி போலீஸ் தலைமையில் இதற்காக ஸ்பெஷல் டீம் ஒன்று உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு கஸ்டம்ஸ் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

நேற்று இரவு
இந்த நிலையில் நேற்று மும்பை துறைமுகத்தில் மொத்தம் 130 கிலோ ஹெராயின் பிடிக்கப்பட்டது. கண்டெய்னர் ஒன்றில் இந்த ஹெராயின் வைக்கப்பட்டு இருந்தது. மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், நள்ளிரவில் இந்த ஹெராயின் மூட்டைகளை கண்டுபிடித்தனர். இது ஆப்கானிஸ்தானில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்டுள்ளது.

எப்படி இருந்தது
இதன் மதிப்பு 1320 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஹெராயின் மிக சரியாக பதப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. யாரும் சந்தேக படக்கூடாது என்பதற்காக இதை சாக்கு மூட்டைகளில் அடைத்து வைத்து கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் மோப்ப நாய்களின் தீவிர தேடுதல் காரணமாக இந்த ஹெராயின் பிடிப்பட்டது.

மொத்தம் எவ்வளவு
இந்த தேடுதல் ஆபரேஷனில் நேற்று காலையில் இருந்து இரவு வரை மொத்தம் 330 கிலோ ஹெராயின் பிடிபட்டு இருக்கிறது. இதற்கு முன் ஒரே நாளில் இவ்வளவு போதை பொருளை கைப்பற்றியது இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார். மும்பையில் போதை பொருள் நெட்வொர்க் இவ்வளவு பெரிதாக வளர்ந்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications