சென்னை, பெங்களூர், நாக்பூர் கூட ஓகே.. டெல்லி வேண்டாம்.. நாட்டின் தலைநகரை மாற்ற வலுக்கும் கோரிக்கை
Recommended Video
டெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மிக குறைந்து கொண்டு செல்வதால், பேசாமல் நாட்டின் தலைநகரை, நாக்பூர், சென்னை அல்லது பெங்களூருக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
காற்று மாசு டெல்லியில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இன்று, காற்றின் தரக் குறியீடு (AQI) 500 ஆக இருந்தது, இது "கடுமையான" பிரிவின்கீழ் வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இந்த அளவு சராசரி 494 ஆக இருந்தது. இது 2016ம் ஆண்டு, நவம்பருக்குப் பிறகு மிக உயர்ந்த அளவாகும்.
வார இறுதி மற்றும் திங்கட்கிழமைகளில், டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் புகை மூட்டம் காணப்பட்டது. கிட்டத்தட்ட எதிரே வருபவர் கூட தெரியாத அளவுக்கு இந்த புகை மூட்டம் காணப்பட்டது.

தேசிய தலைநகரம்
டெல்லி உண்மையில் தேசிய தலைநகரம் என்று அழைக்கப்படுவதற்கு தகுதியானதா என்று பல இந்தியர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இணையதளங்களில், அவர்களில் பெரும்பாலோர் சுட்டிக்காட்டிய விஷயம் என்னவென்றால், மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் துன்பப்படுவது இது முதல் முறை அல்ல. டெல்லியில் குளிர்காலம் புகைமூட்டத்துடன் இணைந்ததாக மாறிவிட்டது. எனவே, டெல்லியில் தலைநகரம் இருந்தால், நாட்டின் பிற பகுதி மக்கள் பல்வேறு விஷயங்களுக்காக அங்கு செல்ல வேண்டியிருக்கும். இதனால், மாசுபாடு இன்னும் அதிகரித்துவிடும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். நெட்டிசன்கள் சொல்வதை பாருங்கள்.
|
அபிஷேக் சிங்வி ட்வீட்
டெல்லியின் இந்த மூச்சுத் திணறலை, உலகம் முழுவதும் எட்டிப் பார்க்கிறது. இந்தோனேசியா அதன் தலைநகரை மாற்றுகிறது. ஆஸ்திரேலியாவில் கான்பெரா, சில சாமானிய செயல்பாடுகளுக்காகவே தலைநகராக உள்ளது. எனவே, இந்தியாவில் ஏன் இரண்டு முதல் நான்கு தலைநகரங்கள் இருக்க கூடாது? இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.
|
நடுநாயகமான நாக்பூர்
அரசு தலைநகரை நாக்பூருக்கு மாற்றலாம். இது மத்திய இந்தியாவில் அமைந்துள்ள நகரமாகும். எனவே, நம் நாட்டின் எந்த மூலையிலிருந்தும் மக்கள் வசதியாக அணுகலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் தலைமையகம் அங்கே உள்ளதே என்கிறார் இந்த நெட்டிசன்.
|
நாடாளுமன்றம்
எனவே கொச்சி அல்லது பெங்களூர் அல்லது ஹைதராபாத்திற்கு, நாடாளுமன்றத்தையும் தலைநகரையும் மாற்றுவதற்காக எவரும் குரல் கொடுக்க ரெடியா என்கிறார் இந்த நெட்டிசன்.
|
சென்னை ஓகேயா
டெல்லி- மாசு தலைநகரம், மும்பை-சாலை பள்ளங்களின் தலைநகரம், கொல்கத்தா- மமதா பானர்ஜியின் தலைநகரம், சென்னை?
தலைநகரை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்கிறார் இந்த நெட்டிசன்.
|
எதுதான் தகுதியானது
டெல்லி ஒரு நுரையீரல் நோய் தலைநகராகிவிட்டது, சென்னை நிரந்தர வறட்சியில் உள்ளது, வரலாற்று பதிவுகள் குறிப்பிடுவதை விட ஹைதராபாத் பல மாதங்கள் வெப்பமாக உள்ளது, கங்கை அளவிற்கு அப்பால் மாசுபட்டுள்ளது, 1 பில்லியன் மக்களுக்கும், வடக்கே சிறந்த நிலத்தை தேடி செல்லும்போது என்ன நடக்கும்? ரஷ்யாவுக்கா போக முடியும்? என்கிறார் இவர்.












Click it and Unblock the Notifications