வலுக்கட்டாயமாக கைது! போலீஸ் அராஜகம்.. டெல்லி போராட்டக்களத்தில் சிபிஎம் சண்முகம் ஆவேசம்
டெல்லி: ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் அறிவித்தது. இடதுசாரி தலைவர்களும் டெல்லியில் போராட வந்த நிலையில், அவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்வதாகவும், அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் ஆவேசமாக கூறினார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும், இளைஞர்களின் ஆதரவை பெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் (சிஜேபி) போராடி வருகின்றன. இன்று டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி அறிவித்த நிலையில் டெல்லி போலீசார் போராட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை.

இடதுசாரி கட்சியினர் கைது
எனினும் இளைஞர்கள் திரண்டு வந்ததால் டெல்லி போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் போராட வந்த இளைஞர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் இடதுசாரி கட்சிகள் போராட்டம் நடத்தினர். அப்போது எம்.ஏ பேபி, பெ சண்முகம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள்
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பெ சண்முகம், டில்லியில் காவல்துறை, துணை ராணுவப்படை அராஜகம் செய்கிறது. காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்வதாகவும், அராஜகத்தில் ஈடுபடுவதாகவும் ஆவேசமாக கூறினார். மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்து சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:-
தலைநகர் டெல்லியில் காவல்துறை துணை ராணுவப்படையினர் கடுமையான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி இன்று டெல்லியில் காப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஐந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்த பின்புலத்தில் கைது வேட்டையும், தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. காப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும் ஆதரவைத் தெரிவித்து இருந்தன.
கடும் அடக்குமுறைகள்
டெல்லிக்கான 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 54 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 35000 காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுரை கூட செவிமடுக்கப்படவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் எம்.ஏ பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் சுட்சி (எம்.எல்) லிபரேசன் சுட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் டெல்லியில் கைதாகி உள்ளனர்.
இடதுசாரி வாலிபர், மாணவர், அமைப்புகளின் தலைவர்கள், முன்னணி ஊழிவர்களும் கைதாகி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில மணி நேரங்களாக காவல் வாகனத்தில் வைத்துக் கொண்டே கற்றி வருகிறார்கள். ஐந்தர்மந்தர் பகுதியில் ஒன்றிய அரசின் டில்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் கடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டுள்ளனர்.
தமிழகம் முழுக்க போராட்டம் நடத்த
போராட்டக்காரர்களை ஒன்று சேர விடாமல் ஆங்காங்கே கைது செய்துள்ளனர். கட்சி, வெகுஜன அமைப்பு அலுவலகங்கள் துணை ராணுவப் படையாலும், ஒன்றிய அரசின் காவல்துறையினாலும் முற்றுகையிடப்பட்டுள்ளன. ஜனநாயக மறுப்பின் உச்சகட்டமாக அரங்கேற்றப்பட்டுள்ள இத்தகைய தாக்குதல்களை இடதுசாரிக் கட்சிகள் வன்மையாக கண்டிக்கின்றன. இந்த அடக்குமுறை, கைதைக் கண்டித்தும், ஞானேஷ் குமார் பதவி நீக்கத்தை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆங்காங்கே இடதுசாரிக் கட்சிகள் சார்பில் உடனடியாக சுண்டன இயக்கங்கள் நடத்திட இடதுசாரி கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.




Click it and Unblock the Notifications
