இரும்பு கோட்டையான டெல்லி.. கரப்பான்பூச்சி கட்சியினர் சாதாரணமாக நுழைய முடியாது.. டாப் 10 பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லிக்கு செல்லும் 245 ரயில்கள் ரத்து.. 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல், கையில் லத்தியுடன் திரும்பும் திசையெங்கும் போலீசார் - துணை ராணுவ படையுடன், முக்கிய சந்திப்புகளில் இரும்பு தடுப்பு வேலிகள், இணையதள சேவை முடக்கம் என்று இன்று காலை முதலே பரபரப்பாக காணப்படுகிறது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அறிவித்த போராட்டத்தால் தலைநகர் டெல்லி. இந்த போராட்டத்தை தடுக்கவும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லிக்குள் நுழையாமல் இருக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள டாப் 10 நடவடிக்கைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கவில்லை.

delhi protest cockroach muslims

டெல்லி காவல்துறையை பொறுத்தவரை போராட்டம் நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பே அனுமதி கோர வேண்டும். ஆனால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் சார்பில் கடந்த 7 ம் தேதி தான் அனுமதி கோரப்பட்டது. இதனால் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

இருப்பினும் தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தயாராகி வருகின்றனர். இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசும் டெல்லி எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் போராட்டத்தை தடுக்க போலீசார் மேற்கொண்டுள்ள டாப் 10 நடவடிக்கைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

* இந்த போராட்டத்தையொட்டி டெல்லியில் 25 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர், அதிவிரைவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 120 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

* குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தை யாரும் நெருங்க முடியாத வகையில் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு 6,500 பேர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்னர்.

* போலீசார் உடலில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். இதுதவிர பல சென்டிட்டவான இடங்களில் வீடியோ மட்டுமின்றி ஆடியோவையும் சேர்த்து பதிவு செய்யும் 300 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர 100 போட்டோகிராபர், வீடியோகிராபர்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

* டெல்லியின் அனைத்து எல்லைகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லிக்குள் வரும் வாகனங்களில் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் உள்பட முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டள்ளது. இரும்பு தடுப்பு வேலிகள் போடப்ட்டுள்ளன.

* போராட்டத்தையொட்டி மத்திய டெல்லியில் 30 முக்கிய இடங்களில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலைகளின் நடுவே இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளனர்.

* போராட்டத்தையொட்டி மொத்தம் 250 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். இதில் 75 ரயில்கள் மெயில் - எக்ஸ்பிரஸ் ரயில்களாகும். 170 ரயில்கள் பயணிகள் ரயிலாகும். பிற மாநிலங்களில் இருந்து புதுடெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் ரயில் நிலையங்களுக்கு செல்லும் ரயில்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளனர்.

* டெல்லியில் நிலவும் பதற்றம் காரணமாக 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

* டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் அதனை சுற்றிய 4 கிலோமீட்டர் தொலைவுக்கு இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

* டெல்லியில் குற்றப்பிண்ணனி கொண்ட 100க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதேபோல் போராட்டத்துக்கு வருவோர் என்று சந்தேகப்படும் நபர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

* போராட்டக்காரர்களை கைது செய்து வைக்க தற்காலிகமாக 12 தடுப்பு காவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* டெல்லியில் உள்ள ஹோட்டல், தங்கும் விடுதிகள் தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிதாக யாருக்கும் தங்க அனுமதி வழங்கப்படவில்லை.

இதுபோன்ற நடவடிக்கையால் மொத்த டெல்லியும் தற்போது போலீசார், அதி விரைவு படையினர், துணை ராணுவ படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. யாரும் நுழைய முடியாத கோட்டையாக டெல்லி மாற்றப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+