டெல்லியை வைத்துச் செய்யும் கனமழை.. புயல் காரணமாக இருவர் பலி! முக்கிய மசூதியும் சேதம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் தீவிர கனமழை கொட்டித்தீர்க்கும் நிலையில், அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பல்வேறு இடங்களிலும் தீவிர கனமழை பெய்து வருகிறது. அங்குப் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் பல பெரிய மரங்கள் அப்படியே வேரோடு சாய்ந்துள்ளன.
நேற்று திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாகத் தேசிய தலைநகரில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி ஜமா மஸ்ஜித் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரும், வடக்கு டெல்லியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க நபரும் பலியாகி உள்ளனர்.
அதேபோல டெல்லியில் உள்ள ஜமா மசூதியின் நடுவில் உள்ள டோமின் ஒரு பகுதியும் பலத்த மழை காரணமாக பெரும் சேதத்தைச் சந்தித்து உள்ளது. இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கனமழை, பலத்த காற்று காரணமா சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் சேதமடைந்தன. மேலும், முக்கிய சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.
இந்த கனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகள் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய எட்டு விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, சண்டிகர், அகமதாபாத் மற்றும் டேராடூனுக்கு திருப்பி விடப்பட்டன.
மேலும், சஞ்சார் பவன் அருகே பகுதிக்கு அருகே மரம் வேரோடு சாய்ந்ததில் மரத்தின் அடியில் பேருந்து சிக்கியதால் அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications